என் மலர்
நீங்கள் தேடியது "அமைச்சர் கேஎன்நேரு"
- புதிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
- சென்னை மாநகராட்சியில் இயற்கை சூழலை மேம்படுத்த 60 கோடி மதிப்பில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
தமிழக சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு பதிலுரைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரூ.1564 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரூ.900 கோடியில் புதிய சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நகரங்களாக வளர்ந்து வருவதில் இந்தியாவில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
நாய்க்கடி பிரச்சினைக்கு தீர்வு காண, அனைத்து நகரங்களிலும் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்க இடம் தேர்வு செய்ய முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மானியக் கோரிக்கையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.
சென்னையில் சொத்து வரி உயர்த்தப்பட்ட பின்னும் மற்ற பெருநகரங்களை விட சென்னையில் சொத்து வரி குறைவாகவே உள்ளது. 1000 சதுர அடிக்கு மும்பை - ரூ.10271, கொல்கத்தா - ரூ.5850, பெங்களூர் - ரூ.5783, டெல்லி - ரூ.1302, சென்னை - ரூ.570, மதுரை - ரூ.484, கோவை - ரூ.340ஆக சொத்து வரி உள்ளது.
2018-60 50%, 100%, 200% என சொத்து வரிகளை உயர்த்தியது அதிமுக, ஆனால் திமுக ஆட்சி வந்த பிறகு 25%, 50%, 100% என்ற அளவில் போடுங்கள் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்
நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உடன் ஊரகப்பகுதிகள் இணைக்கப்படும் போதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எந்த விதத்திலும் தடைபடாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
காவிரியை ஆதாரமாகக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் .
ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 31 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, நகர அமைப்பு என எண்ணற்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சியில் இயற்கை சூழலை மேம்படுத்த 60 கோடி மதிப்பில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
புதிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் ரூ.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
வாகனம் சாரா போக்குவரத்து திட்டத்தின் கீழ், பேருந்து செல்லும் சாலைகளில் 200 கி.மீ நீளத்திற்கு ரூ.200 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கப்படும்.
ரூ.95 கோடி மதிப்பீட்டில் ஓட்டேரி நல்லா மற்றும் விருகம்பாக்கம் கால்வாய்களின் தடுப்புச் சுவரை உயர்த்தவும், குப்பைகள் கொட்ட முடியாத அளவுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கவும் நடவடிக்கை.
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடி மதிப்பீட்டில் பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
ஏரிகள், குளங்களை மறுசீரமைத்து நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க ரூ.120 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ரூ.60 கோடி மதிப்பீட்டில் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
ரூ.45 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.
ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.
ரூ.60 கோடி மதிப்பீட்டில் கள்ளிக்குப்பம், வில்லிவாக்கம் மற்றும் சைதாப்பேட்டை இறைச்சிக் கூடங்கள் மேம்படுத்தப்படும்.
பொது மற்றும் தனியார் பங்களிப்பு மூலம் நவீன வசதிகள் உயர்தர வணிக வளாகங்கள் கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 155 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது
- 400 மோட்டர்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெறுகின்றன.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மழை தொடர்பான பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:- சென்னையில் இதுவரை 155 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. 75 சதவிகிதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மரம் அகற்றுவது, மின்கம்பம் அகற்றுவது, மெட்ரோ ரெயில் பணிகள் போன்ற காரணங்களால் சில இடங்களில் இந்த பணிகள் தாமதமானது.
கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்தாண்டு தண்ணீர் தேங்கவில்லை. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் இந்த ஆண்டு சுத்தமாக உள்ளதாக பொதுமக்கள் பாராட்டும் அளவிற்கு சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகளை செய்துள்ளது. 75 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகளையும் நிறைவு செய்ய ஆயத்தமாகியுள்ளோம். சென்னையில் 400 மோட்டர்கள் வைத்து தண்ணீர் தேங்கும் இடங்களில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்த பிறகு இந்த திட்டத்தை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.
- சென்னை மீஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் நன்றாக செயல்பட்டு வருகிறது.
சென்னை:
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் 2013-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. இங்கிருந்து தினமும் 10 கோடி லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு திருவான்மியூர், ஈச்சம்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலாவது ஆலைக்கு அருகே ஜெர்மன் நாட்டு நிதியுதவியுடன் ரூ.1516.82 கோடியில் 2-வது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இப்போது முடிவுறும் தருவாயில் உள்ளது.
இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகள் முடிந்துள்ளதால் இன்னும் 10 நாட்களில் இதை திறக்க முடிவு செய்துள்ளோம். முதலமைச்சர் வெளிநாடு சென்று வந்த பிறகு இந்த திட்டத்தை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளோம்.

நெம்மேலியில் 2-வது நிலையத்தில் இருந்து தென்சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித தோமையார்மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள 9 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.
சென்னை மீஞ்சூரில் 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் நன்றாக செயல்பட்டு வருகிறது. நெம்மேலியில் 2 நிலையங்கள் உள்ள நிலையில் போரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது. இது 2026 டிசம்பரில் செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.