என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமையாளர் வீடு"

    • சிவகங்கை அருகே பர்னிச்சர் கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
    • தொடர் கொள்ளை சம்பவங்களால் சிங்கம்புணரி பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அண்ணாநகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பாலமுருகன் திருப்பதி சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 அரை பவுன் நகை, ரூ. 90 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். கொள்ளை சம்பவம் தொடர்பாக சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக சிங்கம்புணரி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமூக விரோதச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. நகை, பணம் பறிப்பு, வழிப்பறி, பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்தல் போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    கடந்த 2 வாரத்திற்குள் சிங்கம்புணரி பகுதியில் 3 கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. சிங்கம்புணரியில் போலீசார் ரோந்து செல்வது வெகுவாக குறைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிங்கம்புணரி காவல்நிலையத்தில் போலீசாரின் எண்ணிக்கையும் குறைவு என்று கூறப்படுகிறது. இதனால் ஊருக்குள் வரும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை.

    மாவட்ட எல்லையான சிங்கம்புணரியில் எந்த இடத்திலும் செக்போஸ்ட் இல்லை. கண்காணிப்பு காமிராக்களும் குறைவாகவே உள்ளது. காவல்துறையின் அஜாக்கிரதையால் நிகழும் தொடர் திருட்டு சம்பவங்களால் பெரும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

    ×