என் மலர்
நீங்கள் தேடியது "துணை தாசில்தார்கள்"
- திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தலைமை உதவியாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
- பல்லடம் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்பிரபு, தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக இடம்மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர்:
நிர்வாக வசதிகளுக்காக, திருப்பூர் மாவட்டத்தில், 4 துணை தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்து கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்
அதன்படிபல்லடம் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் செந்தில்பிரபு, தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலராக இடம்மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலரான தேன்மொழி, பல்லடம் தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும், பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் சையது ராபியம்மாள், உடுமலை தேர்தல் பிரிவு துணை தாசில்தாராகவும் இடம்மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
உடுமலை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சாந்தி, திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தலைமை உதவியாளராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள பணி நியமனங்கள் தொடர்பாக, எவ்வித கோரிக்கைகள் மற்றும் மேல் முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.மேற்கண்ட அலுவலர்கள், மாற்றுப்பணியிடம் கோரி மனு செய்தாலோ அல்லது மாறுதலைதவிர்க்கும் வகையில் விடுப்பு கேட்டு விண்ணப்பித்தாலோ, மாறுதல் செய்த பணியிடத்தில் சேர தவறினாலோ, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- உஷாராணி நீதித் துறை பயிற்சி முடித்துவிட்டு தற்போது காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.
- துணை தாசில்தாராக இருந்த மோகனன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியிட மாற்றப்பட்டாா்.
காங்கயம்:
காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக இருந்த மோகனன் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியிட மாற்றப்பட்டாா்.
இதையடுத்து காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றிய கோபால் பதவி உயா்வு பெற்று அதே அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.மேலும் உஷாராணி நீதித் துறை பயிற்சி முடித்துவிட்டு தற்போது காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.