என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுருல் ஹசன்"

    • வங்காள தேசம ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது
    • தொடக்க வீரர் லிட்டோன் தாஸ் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு பயத்தை ஏற்படுத்தினார்.

    உலகக் கோப்பையில் இந்திய அணி 2007-ம் ஆண்டு வங்காளதேச அணியிடம் தோல்வியடைந்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதில் இருந்து ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் இந்தியா- வங்காளதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எப்போதுமே பரபரப்பாகவே செல்லும்.

    நேற்று நடைபெற்ற ஆட்டமும் பரபரப்பாக சென்றது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேச அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் லிட்டோன் தாஸ் அதிரடியாக விளையாட, வங்காள தேசம் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

    லிட்டோன் தாஸ் 21 பந்தில் அரைசதம் கடந்தார். அந்த அணி 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. மழை நின்றபின் ஆட்டம் 16 ஓவராக குறைக்கப்பட்டு, 151 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    மழைக்குப்பின் ஆட்டம் தொடங்கியதும் இந்திய வீரர்கள் சிறப்பான வகையில் பந்து வீசினர். இந்த வங்காள தேசம் 5 ரன்னில் தோல்வியை தழுவியது.

    இந்த நிலையில், வங்காள தேச வீரர் நுருல் ஹசன் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அது என்னவென்றால், விராட் கோலி Fake Fielding-ல் ஈடுபட்டார். அது ஐசிசி விதிக்கு முரண்பாடானது. அதற்காக பெனால்டி முறையில் எங்களுக்கு ஐந்து ரன்கள் தந்திருக்கனும் எனத் தெரிவித்துள்ளார்.

    7-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை லிட்டோன் தாஸ் மிட் விக்கெட் ஆஃப் சைடு அடித்தார். பவுண்டரி லைனில் அர்ஷ்தீப் சிங் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் வீசினார். அப்போது விராட் கோலி பந்து பிடித்து வீசுவது போல் சைகை செய்தார். இது Fake Fielding ஆகும். இப்படி செய்வதை மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் பார்த்தால் பெனால்டியாக ஐந்து ரன்கள் கொடுப்பார்கள்.

    இதைத்தான் நுருல் ஹசன் தற்போது தெரிவித்துள்ளார். வங்களா தேச அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான நுருல் ஹசன் இதுகுறித்து கூறியதாவது:-

    மைதானம் ஈரப்பதமாக இருந்தது. இது ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எல்லோரும் இதை பார்த்து இருப்பீர்கள். நாம் விராட் கோலியின் போலி த்ரோ குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது, அதற்காக எங்களுக்கு ஐந்து ரன்கள் பெனால்டியாக கொடுத்திருக்கனும். அது துரதிருஷ்டவமாக கிடைக்கவில்லை.

    இந்த போட்டியில் மேலும் சில முடிவுகள் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தினேஷ் கார்த்திக் ரன்-அவுட்டின்போது பந்து பீல்டரின் கையில் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. பந்து முதலில் ஸ்டம்பை தாக்கியதா? அல்லது பீல்டரின் கை தாக்கியதா? என்பது தெளிவாக தெரியவில்லை. நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

    லிட்டோன் தாஸ் அர்ஷ்தீப் சிங் பந்தில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், பந்து தரையில் பட்டு தினேஷ் கார்த்திக் கையில் புகுந்தது போல் தெரிந்தது. நடுவர் சந்தேகத்தின் பேரில் நாட்-அவுட் இல்லை எனத் தெரிவித்து 3-வது நடுவரின் உதவியை நாடினார்.

    ரீ-பிளேயில் பந்து தரையில் படுவதை நடுவர் உறுதி செய்ய முடியாத நிலையில், ஒன்றிரண்டு ரீ-பிளேயுடன் நாட்-அவுட் என அறிவித்துவிட்டார்.

    எப்படியோ, சர்ச்சைக்கிடையில் பரபரப்பான ஆட்டத்திற்கு இடையில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது.

    ×