என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குஜராத் சட்டசபை தேர்தல்"
- குஜராத்தில் புதிய மந்திரிகளில் 16 பேர் கோடீசுவரர்கள் 4 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
- பணக்கார மந்திரிகளில் முதல் இடம் பிடித்திருப்பவர் பல்வந்த்சிங் ராஜ்புத். இவரது சொத்து மதிப்பு ரூ.372.65 கோடி.
ஆமதாபாத்:
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து அங்கு பூபேந்திர படேல் நேற்று முன்தினம் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
அவருடன் 16 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களில் 8 பேர் கேபினட் அந்தஸ்து மந்திரிகள் ஆவார்கள். 2 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 6 பேர் ராஜாங்க மந்திரிகள் ஆவார்கள்.
அங்கு புதிதாக பதவி ஏற்றுள்ள முதல்-மந்திரி பூபேந்திர படேல் மற்றும் 16 புதிய மந்திரிகள் பற்றி ஆராய்ந்து ஏ.டி.ஆர். என்று அழைக்கப்படுகிற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் சுவாரசிய தகவல்களை வெளியிட்டுள்ளன. அது பற்றிய ஒரு அலசல் வருமாறு:-
* புதிய மந்திரிகளில் 4 மந்திரிகள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மீன் வளத்துறை ராஜாங்க மந்திரி பர்சோத்தம் சோலங்கி மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 420 மற்றும் 465-ன் கீழ் மோசடி வழக்கு உள்ளது.
* மந்திரிகள் ஹர்ஷ் சங்கவி, ருஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல் ஆகியோர் மீது இந்திய தண்டனைச்சட்டம் பிரிவுகள் 188, 500-ன் கீழ் பொது ஒழுங்குக்கு கீழ்ப்படியாமை மற்றும் அவதூறு வழக்குகள் உள்ளன.
* புதிய மந்திரி சபையில் முதல்-மந்திரி பூபேந்திர படேல் உள்பட 16 பேர் கோடீசுவரர்கள் ஆவார்கள்.
* புதிய மந்திரிகளின் சராசரி சொத்து மதிப்பு ரூ.32.7 கோடி. (முந்தைய மந்திரிசபையில் மந்திரிகளின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.95 கோடிதான்).
* பணக்கார மந்திரிகளில் முதல் இடம் பிடித்திருப்பவர் பல்வந்த்சிங் ராஜ்புத். இவரது சொத்து மதிப்பு ரூ.372.65 கோடி.
* மந்திரிகளில் மிகக்குறைந்த சொத்துகளை உடையவர் பாச்சுபாய் காபத் ஆவார். இவரது சொத்து மதிப்பு ரூ.92.85 லட்சம்தான்.
* 6 மந்திரிகள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள். 8 மந்திரிகள் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்தவர்கள். 3 மந்திரிகள் பட்டயப்படிப்பு படித்தவர்கள். முதல்-மந்திரி பூபேந்திர படேலும் சிவில் என்ஜினீயரிங்கில் பட்டயப்படிப்பு படித்தவர்தான்.
* 3 மந்திரிகள் 50 வயதுக்கு குறைவானவர்கள். ஹர்ஷ் சங்கவி (வயது 37) மிக இளைய மந்திரி ஆவார். கனுபாய் தேசாய்தான் மிக மூத்த மந்திரி. இவரது வயது 71.
இவ்வாறு அந்த தகவல்கள் கூறுகின்றன.
- 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பாஜகவுக்கு 156 இடங்கள் கிடைத்தன.
- மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக சிறந்த நிர்வாகத்துக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே இது உள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அங்கு 7வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பாஜகவுக்கு 156 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், ஆம்ஆத்மி 5 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத் கடந்த 1995ம் ஆண்டு முதலே பாஜக கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது.
குஜராத்தில் தற்போது முதல் அமைச்சராக பூபேந்திர படேல் உள்ளார். சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால் குஜராத்தில் பாஜக சார்பில் முதலமைச்சராக பூபேந்திர படேல் மீண்டும் வருகிற 12ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
இது தொடர்பாக குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-
குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் தொடருவார். அவரது பதவி ஏற்பு விழா வருகிற 12ம் தேதி நடைபெற உள்ளது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
தேர்தலில் போட்டியிட்ட ஆத் ஆத்மி கட்சி இலவசங்களை வாரி வழங்கி குஜராத் மக்களை இழிவுபடுத்த முயன்றது. குஜராத் மக்களை அந்த கட்சியால் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது. மற்ற கட்சிகளும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி குஜராத் மக்களை ஏமாற்ற முயன்றன.
அந்த கட்சிகள் அனைத்துக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். மாநிலத்துக்கு எதிரான சக்திகள் அனைத்தும் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக சிறந்த நிர்வாகத்துக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே இது உள்ளது. மக்களின் ஆதரவை தொடர்ந்து இழந்து வருவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல் முறையாக பதவி ஏற்றார். தற்போது 2-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
- டெல்லி மாடல் ஆட்சியை முன்னிட்டு பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி குஜராத்திலும் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டு இருந்தது.
- குஜராத் வாக்காளர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது இன்று ஓட்டு எண்ணிக்கையில் தெரிய வந்துள்ளது.
காந்திநகர்:
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 1 மற்றும் 5-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதில் 66.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும்.
வாக்கு பதிவு சதவீதம் எண்ணிக்கை குறைந்ததால் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு நாடுமுழுவதும் ஏற்பட்டது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் முடிவுகள் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
இந்தநிலையில் இன்று காலை 8 மணிக்கு குஜராத்தில் 37 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பிறகு மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியிடப்பட்டன.
தொடக்கத்தில் இருந்தே பா.ஜனதா கட்சி முன்னிலை பெற்றது. நேரம்செல்ல செல்ல பா.ஜ.க. வெற்றி முகத்துடன் இருந்த தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. 9 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலை வகித்தது.
குஜராத்தில் பா.ஜனதா கட்சி 7-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்திலும் தெரிவிக்கப்பட்டு இருந்தன. அதை உறுதிப்படுத்துவது போல இன்று தேர்தல் முடிவுகள் அமைந்தன. பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்பது உறுதியான நிலையில் அந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வதில்தான் அரசியல் நிபுணர்களின் ஆர்வம் காணப்பட்டது.
பா.ஜனதா கட்சி இந்த தடவை 151 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்தது. 9.30 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருந்த நிலையில் 155 இடங்களுக்கு மேல் பா.ஜனதா எட்டிப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா கட்சி 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றி நெருக்கத்தில் வந்து சவாலை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் பா.ஜனதா பக்கம் சாய்ந்ததால் குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் பலம் குறைந்தது.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 77 இடங்களை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வந்தனர். ஆனால் கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 50 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய போது அந்த அளவுக்கு தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்று இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல பல தொகுதிகளில் காங்கிரஸ் பின் தங்கியது.
காலை 9.30 மணி அளவில் வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று இருந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 55 தொகுதிகளை இழந்து காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
டெல்லி மாடல் ஆட்சியை முன்னிட்டு பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி குஜராத்திலும் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டு இருந்தது. ஆனால் குஜராத் வாக்காளர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது இன்று ஓட்டு எண்ணிக்கையில் தெரிய வந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு 9 தொகுதிகள் மட்டுமே முன்னிலை கிடைத்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி இரு கட்சிகளும் பெரிய அளவில் வாக்குகளை பெறாததால் பா.ஜனதா கட்சி கடந்த தேர்தலை விட இந்த தடவை அதிக வெற்றியை ருசித்து இருக்கிறது.
பா.ஜனதா கட்சிக்கு 155-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று முன்னிலை நிலவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் குஜராத் அரசியலில் பா.ஜனதா கட்சி 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி அதிரடியை நிகழ்த்தி உள்ளதோடு குஜராத் அரசியல் களத்தில் புதிய சாதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு குஜராத் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அதில் பா.ஜனதா வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
- குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
- குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
அகமதாபாத்:
சட்டசபை தேர்தல் நடைபெற்ற குஜராத், இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை முதலே பா.ஜ.க. பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
காலை 10 மணி நிலவரப்படி பா.ஜ.க. 146 இடங்களில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் 26 இடங்களிலும், ஆம் ஆத்மி - 8 இடங்களிலும், மற்றவை- 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
எனவே குஜராத்தில் 7-வதுமுறையாக பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கிறது.
- குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அகதாபாத்:
குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்தவகையில் 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதியும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.
இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் முடிந்து சுமார் 1 மாதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும் வாக்குகள் அனைத்தும் இந்த மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன.
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவினர் இங்கும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டனர். அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக களத்தில் வரிந்து கட்டியிருந்தன.
மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பது கடினம் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
எனினும் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க முடியும் என பா.ஜனதா நம்பிக்கை தெரிவித்து உள்ளது. அதேநேரம் இழந்த ஆட்சியை கைப்பற்றுவோம் என காங்கிரசும் நம்பிக்கையுடன் இருக்கிறது.
இதில் யாருடைய கனவு பலிக்கும்? என்பது இன்று தெரிந்து விடும்.
இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
- குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
- தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும் என தெரிவித்தன.
புதுடெல்லி:
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 1-ம் தேதி முதற்கட்ட தேர்தலும், 5-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
இதேபோல், 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்திற்கு கடந்த 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. குஜராத்தில் 182 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் குஜராத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவித்தன.
இதேபோல, இமாச்சல பிரதேசத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கலாம் என கருத்துக் கணிப்புகள் கூறின.
இந்நிலையில், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதியத்துக்கு மேல் மகுடம் சூடப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.
- குஜராத் மாநிலத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.
- குஜராத் மாநிலத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு, நேரம் செல்லச்செல்ல விறுவிறுப்படைந்தது.
காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 19.17 சதவீதமாகவும், மதியம் 1 மணி நிலவரப்படி 34.74 சதவீதமாகவும் பதிவாகியிருந்தன. மாலை 3 மணி நிலவரப்படி 50.51 சதவீதமாகவும், 5 மணி நிலவரப்படி 58 சதவீதமாகவும் வாக்குகள் பதிவாகியிருந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மாலை 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 8-ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
- குஜராத் மாநிலத்தில் இன்று 93 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.
- 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது
அகமதாபாத்:
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளில் இன்று தேர்தல் நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. நேரம் செல்லச்செல்ல விறுவிறுப்படைந்தது. காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 19.17 ஆக இருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 34.74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 3 மணி நிலவரப்படி 50.51 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதிகட்சமாக சபர்கந்தா மாவட்டத்தில் 57.24% வாக்குகள் பதிவாகியிருந்தன.
5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 58.38 சதவீதமாக உயர்ந்தது. 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. எனவே, இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த முழு விவரத்தை தேர்தல் ஆணையம் பின்னர் அறிவிக்கும். வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
- அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் பிரதமர் மோடி வாக்குசாவடி மையத்திற்கு சென்று வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
- இரு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை முதலே பொது மக்கள் வரிசை நின்று தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர்.
அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் பிரதமர் மோடி வாக்குசாவடி மையத்திற்கு சென்று வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
இந்நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 4.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காந்திநகரில் 7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 19.17 ஆக இருந்தது.
இந்நிலையில், தற்போது 1 மணி நிலவரப்படி குஜராத் 2ம் கட்ட தேர்தலில் இதுவரை 34.74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இரு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
- 93 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 93 தொகுதிகள் குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன. மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் பிரதமர் மோடி வாக்குசாவடி மையத்திற்கு சென்று வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது:-குஜராத், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி மக்களால் ஜனநாயக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தேர்தலை அமைதியாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.
- 93 தொகுதிகள் குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன.
- இரு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
93 தொகுதிகள் குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன.
மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி 31 பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டார்.
இரு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
- முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பூபேந்திர படேல் போட்டியிடும் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
- இரு கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன. மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது.
பிரதமர் மோடி 31 பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டார். சூரத், அகமதாபாத் ஆகிய இடங்களில் மிகப்பிரமாண்டமான வாகன பேரணியை நடத்தினார்.
காங்கிரசுக்கு ஆதரவாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் பெருமளவில் பங்கேற்கவில்லை. உள்ளூர் தலைவர்களே பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், ஆகியோர் ஆம் ஆத்மிக்கு பிரசாரம் செய்தனர்.
பா.ஜ.க. முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பூபேந்திர படேல் போட்டியிடும் காட்லோடியா தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
இரு கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்