என் மலர்
நீங்கள் தேடியது "தயாளு அம்மாள்"
- மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்.
- தயாளு அம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சென்னை :
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் மனைவியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள், கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.
கருணாநிதியின் மறைவின் போதே, அவர் உடல்நலக்குறைவோடுதான் இருந்தார். அதன் பிறகும் அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி வந்தார். அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் உடல் நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினார்.
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அவ்வப்போது கோபாலபுரத்துக்கு சென்று தாயாரை அவர் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்த தயாளு அம்மாளுக்கு நேற்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்த அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயார் தயாளு அம்மாளை பார்ப்பதற்காக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு நேற்று பிற்பகல் 12.40 மணியளவில் வந்தார்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர். மருத்துவமனைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அருகில் இருந்து தாயாரை கவனித்துக்கொண்டார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் அங்கிருந்துவிட்டு, மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.
- தயாளு அம்மாள் அப்பல்லோவில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- தயாளு அம்மாளுடன் அவரது மகள் செல்வி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வந்தார்.
அவருக்கு வயது முதிர்வு காரணமாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று காலை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.
தகவல் கிடைத்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று தாயார் தயாளு அம்மாளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது டாக்டர்கள் தாயாளு அம்மாள் 2 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்றால் நன்றாக இருக்கும் என்றனர்.
இதைத்தொடர்ந்து தயாளு அம்மாள் அப்பல்லோவில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது அவரது உடல் நிலை பரவாயில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
தயாளு அம்மாளுடன் அவரது மகள் செல்வி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு முதுமை காரணமாக கடந்த 3-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தயாளு அம்மாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளுக்கு முதுமை காரணமாக கடந்த 3-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தயாளு அம்மாளை பார்த்தார். சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடமும் கேட்டறிந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று இரவு 8.30 மணி அளவில் தயாளு அம்மாள் வீடு திரும்பினார். கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் தயாளு அம்மாள் அங்கு ஓய்வெடுத்து வருகிறார்.
- கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் (வயது 90) கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.
வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவரை அவ்வப்போது அவரது மகன்களான மு.க.அழகிரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் தனித்தனியாக நேரம் கிடைக்கும்போது வந்து பார்த்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் இன்று தயாளு அம்மாளுக்கு 90-வது பிறந்தநாள் என்பதால் கோபாலபுரம் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது அண்ணன் மு.க.அழகிரி, தம்பி மு.க. தமிழரசு, செல்வி, கனிமொழி, தயாநிதிமாறன், அமிர்தம் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
இவர்களுடன் அமைச்சர் உதயநிதி, நடிகர் அருள்நிதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
- முதலமைச்சரின் தாயார் தயாளு அம்மாளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
- தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள். இவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.
இதனால் உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் தயாளு அம்மாளைப் பார்ப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
- தயாளு அம்மாள் உடல்நிலையை மருத்துவர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
- தற்போது தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்து உள்ளதாக தெரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலையை மருத்துவர் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்து உள்ளதாக தெரிகிறது.
அடுத்த சில நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி அதன் பிறகு தயாளு அம்மாளை வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
- மருத்துவ குழுவினர் தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்துள்ளதாக கூறினர்.
- உடல்நலம் தேறியதை அடுத்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்ச்ர் கருணாநிதி அவர்களின் மனைவியும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 5ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்த மருத்துவ குழுவினர் தயாளு அம்மாளுக்கு சளி தொல்லை குறைந்துள்ளதாக கூறினர்.
மேலும், அடுத்த சில நாட்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கி அதன் பிறகு தயாளு அம்மாளை வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று உடல்நலம் தேறியதை அடுத்து தயாளு அம்மாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று மாலையில் தயாளு அம்மாள் நலமுடன் வீடு திரும்பினார்.