என் மலர்
நீங்கள் தேடியது "சிஹார் ஷின் வாரி"
- டி20 போட்டிகள் தொடர்பாக நடிகை சிஹார் ஷின் வாரி வெளியிட்ட பல்வேறு பதிவுகள் பலிக்கவில்லை.
- விராட் கோலியை விரைவில் அவுட் ஆகும் படி இந்திய வாலிபர் கேட்டுக்கொண்டார்.
இஸ்லாமாபாத்:
20 ஓவர்கள் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.
இதில் பாகிஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி தோற்கடித்தது. இந்த நிலையில் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 போட்டி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் நடிகை சிஹார் ஷின்வாரி விபரீத சவால் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் என்றும் இல்லாத அதிசயமாக ஜிம்பாப்வே அணி, இந்திய அணியை தோற்கடித்து விட்டால் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஒருவரை நான் திருமணம் செய்து கொள்ளத் தயார் என்று கூறியுள்ளார். இதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டி20 போட்டிகள் தொடர்பாக நடிகை சிஹார் ஷின் வாரி வெளியிட்ட பல்வேறு பதிவுகள் பலிக்கவில்லை. இதையடுத்து அவரை பலரும் சமூக வலைதளத்தில் கிண்டல் செய்து வருகின்றனர். சிலர் அவரது முந்தைய கணிப்புகள் பொய்யானதை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்திய வாலிபர் ஒருவர் பாகிஸ்தான் நடிகையின் பதிவிற்கு கிண்டலாக பதில் அளித்துள்ளார். நானும் ஜிம்பாப்வே காரன் தான். என்று பதிவிட்ட அந்த வாலிபர் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி விரைவில் அவுட் ஆகும் படி கேட்டுக்கொண்டார். நீங்கள் சீக்கிரம் அவுட் ஆனால் நான் செட்டில் ஆகி விடுவேன் என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.