என் மலர்
நீங்கள் தேடியது "பாதாள சாக்கடை அடைப்பால் வெளியேறும் கழிவுநீர்"
- சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- கழிவுநீர் நடந்து செல்பவர்கள் மீது விசிறி அடிக்கப்படும் அவலம் உள்ளது.
தருமபுரி,
தருமபுரி நேதாஜி சாலையிலிருந்து பிட மனேரிக்கு சாலை செல்கி றது. இந்த பகுதியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து முடிந்துவிட்டன.இந்நிலையில் தருமபுரி விளையாட்டு அரங்கம் முதல் ரெயில்வே சுரங்க பாதை வரை சிதிலமடைந்து கிடந்த சாலை சமீபத்தில் புதிதாக போடப்பட்டது.ஆனால் பாதாள சாக்கடை மூடிகளையும் சேர்த்து சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதனால் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கழிவுநீர் மூடியை மீறி சாலையில் வெளியேறுகிறது.இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த சாலையில் செல்லும் பாத சாரிகள் மூக்கை பிடித்தவாறு கடந்து செல்கின்றனர்.
இருப்பினும் வாகனங்கள் கடக்கும்போது கழிவுநீர் நடந்து செல்பவர்கள் மீது விசிறி அடிக்கப்படும் அவலம் உள்ளது.
இந்த சாலையை மெதுவாக கடக்க வாகன ஓட்டிகள் முயற்சிப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடிகளை எளிதாக திறந்து அடைப்புகளை சீர் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.