என் மலர்
நீங்கள் தேடியது "உயர்கல்வி-பணி வாய்ப்பு"
- தமிழக அரசின் “நான்முதல்வன்” திட்டத்தின் கீழ் எச்.சி.எல். தொழில் நுட்பநிறுவனம் மூலம் பயிற்சி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
- சிறப்பு முகாம் காலை 10மணிக்கு தொடங்கும்.
திருப்பூர் :
தமிழக அரசால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில், 2021 மற்றும் 2021 -2022 ம் கல்வியாண்டில் 12 ம் வகுப்பு முடித்த மாணவர்களில் கணிதம் மற்றும் வணிக கணிதத்தில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழக அரசின் "நான்முதல்வன்" திட்டத்தின் கீழ் எச்.சி.எல். தொழில் நுட்பநிறுவனம் 'Tech Bee"- Early Career Training Programமூலம் பயிற்சி அளித்து முழுநேர பணிவாய்ப்பு மற்றும் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி வாய்ப்பினை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, பள்ளி மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு கீழ்க்கண்ட பட்டியல் படி சிறப்பு முகாம் பள்ளி மாணவர்களுக்கு நடைபெறவுள்ளது.வருகிற 7-ந்தேதி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி, 8-ந்தேதி பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 9-ந்தேதி தாராபுரம் என்.சி.பி.நகரவை மேல்நிலைப்பள்ளி, 10-ந்தேதி உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. காலை 10மணிக்கு முகாம் தொடங்கும். இத்தகவலை கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.