search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள்"

    • தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது வகுப்பறையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது.
    • மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

    பள்ளி மாணவர்களின் வகுப்பறையில் மேல் பகுதி பக்கவாட்டு சுவர்களில விரிசல்களில் லேசான மழைக்குக்கூட தாக்கு பிடிக்காமல் பழுதடைந்த கட்டிடம் உள்ளது.

    இந்த நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது வகுப்பறையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது.

    இதனால் பள்ளி மாணவர்கள் கடும் அவதிபட்டு வருகின்றனர். இவற்றை முறையாக சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு முறை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கல்வி துறை அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

    ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள கிராமபகுதி மாணவ, மாணவியர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை
    • 40 சதவீத பள்ளி கட்டிடங்களை அகற்றி விட்டதாக தகவல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் சேதமடைந்த மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை அகற்றி விபத்துகள் ஏற்படும் முன்னரே அகற்றப்பட்டு வருகிறது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட முழுவதும் ஆரம்பப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பொதுப் பணியாளர் துறையை சேர்ந்த பொறியாளர்கள் ஆய்வு கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

    பின்னர் சேதம் அடைந்த கட்டிடங்களை இடிக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆணையிட்டார் அதன்படி ஜேசிபி எந்திரம் மூலம் நெமிலி அடுத்த வேடல் பகுதியில் உள்ள பழுதடைந்த நிலையில் உள்ள பழமையான பள்ளி கட்டிடத்தை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.

    கட்டிடக்கழிவுகள் அகற்றி அந்த இடத்தில் புதிய பள்ளி கட்டிடங்களை கட்ட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    இதே போல மாவட்டத்தில் 40 சதவீத பள்ளி கட்டிடங்களை அகற்றி விட்டதாகவும் மீதமுள்ள கட்டிடங்களை அகற்றி வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×