என் மலர்
நீங்கள் தேடியது "கட்டிடம் திறப்பு விழா"
- அதே வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
- துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள உகாயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொல்லிக் காளிபாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் சேமிப்பு நிதியிலிருந்து ரூ. 20 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பொங்கலூர் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் பூங்கொடி வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கனகராஜ், துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய பள்ளி கட்டிடத்தை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணியம், சிவாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அதே வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி குழு சார்பில் கட்டப்பட உள்ள இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ரத்தினசாமி, ஆசிரியர் சங்க தலைவர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி,மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.