என் மலர்
நீங்கள் தேடியது "முத்துராமலிங்கத் தேவர்"
- தலைவர்கள் உருவப்படங்களின் கண்ணாடியை உடைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- உருவப்படம் உடைப்பு காரணமாக நெல்லை சந்திப்பில் இருந்து திருப்பணி கரிசல்குளம் செல்லும் பஸ் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பேட்டை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் பகுதியில் பொதுமக்களால் ஊர் முகப்பில் பீடம் ஒன்று அமைக்கப்பட்டு முத்துராமலிங்கத் தேவர் உருவப்படம் மற்றும் பூலித்தேவன் உருவப்படம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு மர்ம நபர்கள் பீடத்தின் கண்ணாடிகளை உடைத்துள்ளனர்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நெல்லை துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே தலைவர்கள் உருவப்படங்களின் கண்ணாடியை உடைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
அதன்பிறகு அங்கிருந்த படங்கள் மற்றும் சிலைகள் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டு புதிய படங்கள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
உருவப்படம் உடைப்பு காரணமாக நெல்லை சந்திப்பில் இருந்து திருப்பணி கரிசல்குளம் செல்லும் பஸ் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
- முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி மரியாதை.
- விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.
அதன்படி, த.வெ.க. அலுவலகத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் படத்திற்கு மலர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.