search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டறியும் முகாம்"

    • யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் வெள்ளகோவிலில் நடைபெற்றது.
    • பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    வெள்ளகோவில் :

    யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் வெள்ளகோவிலில் நேற்று இரவு நடைபெற்றது.

    வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். டி ராஜலட்சுமி, நகராட்சி ஆணையர் ஆர். மோகன் குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, வெள்ளகோவில். உப்புபாளையம் பகுதிகளில் யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த இரவுநேர மருத்துவ முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன்.கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    ×