search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல் ஆஞ்சநேயர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒருசமயம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் ஆஞ்சநேயர் நீராடிய போது ஒரு சாளக்ராமம் கிடைத்தது.
    • அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார்.

    பங்குனி உத்திரம் தினத்தன்று காதில் பூ வைத்து காட்சி தருகிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

    நாமக்கல் நரசிம்மர் தலத்தில் பங்குனி உத்திர விழா விசேஷமாக நடக்கிறது.

    அன்று ஒரு நாள் மட்டும் நரசிம்மர், தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார்.

    ஒருசமயம் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் ஆஞ்சநேயர் நீராடிய போது ஒரு சாளக்ராமம் கிடைத்தது.

    அதை ஆஞ்சநேயர் பூஜைக்காக எடுத்துக் கொண்டு வான்வழியே பறந்து வந்தார்.

    நாமக்கல் தலத்தில் நீராடுவதற்காக அவர் இறங்கினார்.

    சாளக்ராமத்தை கீழே வைக்க முடியது என்பதால் என்ன செய்வது என யோசித்த வேளையில் தீர்த்தக்கரையில் மகாலட்சுமி தாயார், தவம் இருப்பதைக் கண்டார்.

    அவளை வணங்கிய ஆஞ்சநேயர், அவளது தவத்திற்கான காரணத்தைக் கேட்டார்.

    திருமாலை, நரசிம்ம வடிவில் தான் பார்த்ததில்லை என்றும் அந்த வடிவத்தைக் காண தான் தவம் இருப்பதாகவும் கூறினாள்.

    ஆஞ்சநேயர் அவளது கையில் சாளக்ராமத்தைக் கொடுத்து, நீராடி விட்டு, வந்து வாங்கிக் கொள்வதாக சொன்னார்.

    குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து வாங்கிக் கொள்ளாவிட்டால், சாளக்ராமத்தை தரையில் வைத்து விடுவேன் என லட்சுமி தாயார் நிபந்தனை விதித்தாள்.

    ஆஞ்சநேயருக்கு சில காரணங்களால் தாமதமாகி விட்டது.

    தாயார், சாளக்ராமத்தை கீழே வைத்து விட்டாள்.

    தாமதமாக வந்த ஆஞ்சநேயர் சாளக்ராமத்தை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

    அது பெரிய மலையாக உருவெடுத்தது. அம்மலையில் நரசிம்மர் தோன்றி தாயாருக்கு அருள் செய்தார்.

    இவர் லட்சுமி நரசிம்மர் எனப்பட்டார். ஆஞ்சநேயரும் இங்கேயே தங்கி விட்டார்.

    நரசிம்மரின் மடியில் லட்சுமி இருந்ததால், லட்சுமி நரசிம்மர் என்றழைக்கப்படுகிறார்.

    ஆனால் லட்சுமி இவரது மடியில் இல்லாமல் மார்பில் இருக்கிறாள்.

    இவளை வணங்கிட கணிதத்தில் புலமை பெறலாம் என்பது நம்பிக்கை.

    சாளக்ராமத்தைக் கொண்டு வந்த ஆஞ்சநேயருக்கு நரசிம்மர் கோவில் எதிரே தனிக் கோவில்  இருக்கிறது.

    18 அடி உயரமுள்ள இவர் கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

    பங்குனியில் இங்கு 15 நாள் விழா நடக்கிறது.

    பங்குனி உத்திரத்தன்று காலையில் மூலஸ்தானத்திலுள்ள நரசிம்மர் தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்தியாக காட்சி தருகிறார்.

    அப்போது விசேஷ அபிஷேகம் நடக்கிறது.

    அதன் பின் இருவரும் முன்மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர்.

    அன்று ஒரு நாள் மட்டுமே சுவாமி தாயார் இருவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.

    ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொருளாதாரத்தை அடைகிறோம்.

    மகாலட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் நிறைந்த இடமாவதால் வீரலட்சுமி அம்சமான

    ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொருளாதாரத்தை அடைகிறோம்.

    ஸ்வர்ண அபிஷேக பலன்:

    பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற இறைவனுக்கு தங்க தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டுமென

    சாஸ்திரங்கள் கூறுவதால் தம்மால் இயன்ற தங்க ஆபரணங்களை புனித மந்திரங்களை சொல்லி உருவேற்றிய

    குடத்திற்குள் போட்டு அந்த தீர்த்தத்தை சாமிக்கு அபிஷேகம் செய்வதால் பூர்ண ஆயுள் பெற்று நம்முடைய

    இல்லங்களில் வற்றாத தங்க ஆபரணங்கள் அடைகிறோம்.

    • வியாதியற்ற வாழ்வு பெற வேண்டியும் மஞ்சள் அபிஷேகம் செய்கிறோம்.
    • கடமைகள் நடைபெற வேண்டி இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்கிறோம்.

    வீடு, மனைவி, மக்கள், வாகனம், நிலம், இவை அனைத்தும் நம்மை படைக்கும் பொழுது

    நமக்கு இறைவனால் கொடுக்கப்படும் கடனாகவே படைக்கப்படுகிறோம்.

    நாம் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோர்கள் பெற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்

    இவை அனைத்தும் செவ்வனே நடைபெற வேண்டி இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்கிறோம்.

    நல்ல மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அபிஷேக பலன்:

    பெண்டிர்கள், சுமங்கலித்துவம் பெறவும், உலகமெங்கும் அமங்கலமான செயல்களை தவிர்க்கவும்,

    வியாதியற்ற வாழ்வு பெற வேண்டியும் மஞ்சள் அபிஷேகம் செய்கிறோம்.

    • சீயக்காய் அபிஷேகத்தினால் மன அழுக்குகள் அகன்று தூய மனோ சக்தியை பெறுகிறோம்.
    • யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழி பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.

    சீயக்காய் அபிஷேகத்தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள்

    அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.

    பால் அபிஷேக பலன்:

    வேதம் கற்றரிந்த சான்றோருக்கு ஒரு மழை, நீதி வழுவா அரசருக்கு ஒரு மழை, கற்பு நெறி தவறாத மாதர்க்கு ஒரு மழை.

    இதுபோல் மாதம் மும்மாரி (மழை) பெய்யவும்,தாய்மார்களுக்கு தாய்ப்பால் சக்தி கிடைக்கவும், தேசங்களிலும்,

    வீடுகளிலும் பால் பொருட்கள் பெருகவும், பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர் நிலைகளில் வற்றாத ஊற்று வரவும்,

    யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழி பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.

    • ‘பழம், மனோரத பலம்‘ என்று சாஸ்திரம் கூறுவதால் செயல்கள் நிறைவேற பழங்களால் அபிஷேகம் செய்கிறோம்.
    • மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

    மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

    அவை கண், காது, வாய், மூக்கு, பிறப்புறுப் பாகப்பட்ட உயிர்நிலை ஆகிய இடங்களில் இருந்து நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது.

    இவை அனைத்தும் நன்றாக வாழ்நாள் முழுவதும் செவ்வனே இயங்க வேண்டி இறைவனுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்கிறோம்.

    'பழம், மனோரத பலம்' என்று சாஸ்திரம் கூறுவதை எண்ணி காரியங்கள் நிறைவேற பழங்களால் அபிஷேகம் செய்கிறோம்.

    • சனீஸ்வர பகவான் எள் தானியத்தை தனக்கு பிரியமாக எடுத்துக் கொள்கிறார்.
    • எள்ளு எண்ணையால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெறுகிறோம்.

    இந்து மதத்தின் தர்ம சாஸ்திரப்படி ஒருவன் இயற்கை எய்தினால் அவர் திருமாலின் திருவடி (மோட்சம்) அடைவதே சாஸ்திரமாகும்.

    திருமால் தன்னுடைய வியர்வை துளிகளை எடுத்து தெளித்த உடன் அது கருநீல நிறம் போன்று எள் தானியமாக விளைகிறது.

    எம்பெருமான் சரீரத்தில் கருநீல நிறம் போன்று உள்ள சனீஸ்வர பகவான் எள் தானியத்தை தனக்கு பிரியமாக எடுத்துக் கொள்கிறார்.

    நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணையால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.

    • தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்படுகிறது.
    • வடைமாலை சாற்றி ராகு சம்பந்தப்பட்ட தோசத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.

    வடைமாலை பலன்:

    சூரியனை ராகுவும், சந்திரனை கேதுவும் பிடிக்கும் நிகழ்ச்சியே கிரகணம் எனப்படுகிறது.

    அப்பேர்ப்பட்ட சூரிய பகவானை, ஸ்ரீ அனுமான் பிறந்தவுடன் பழம் என்று நினைத்து சூரியனை பிடித்துக் கொள்கிறார்.

    அதைக்கண்ட ராகு பகவான் அனுமானிடம் போர் செய்து தோல்வியைக் கண்டார்.

    அப்போர் நிகழ்ச்சியை இந்திரனிடம் ராகு பகவான் முறையிட இந்திரனுக்கும், அனுமானுக்கும் போர் ஏற்படுகிறது.

    அப்போரில் இந்திரனின் வஜ்ராயுதம் மாகப்பட்டது அனுமானின் தாடையில் அடிபட்டு வீங்கி விடுகிறது.

    தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ராகு பகவான் தனக்கு ஏற்பட்ட தோல்வி காரணமாக உளுந்து தானியங்களால் என்னுடைய சரீரம் போல் (பாம்பின் உடம்புபோல்) மாலையாக (வடை மாலையாக) உனக்கு சமர்பணம் செய்வோருக்கு ராகு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகி நல்வாழ்வு பெற உதவுகிறோம் என்று ராகு அனுமானிடம் கூறுகிறார்.

    ஆதலால் தாமும் ஸ்ரீ அனுமாருக்கு வடைமாலை சாற்றி ராகு சம்பந்தப்பட்ட தோசத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.

    • ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது.
    • வெளிநாட்டு பக்தர்களையும் வியக்க வைக்கும் இந்த கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது.

    1) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் மட்டும் வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

    2) ஆஞ்சநேயர் கோவிலில் புதிய வாகனங்களுக்கு பூஜை போடுவதை நாமக்கல் நகர மக்கள் வாடிக்கையாக கொண்டு உள்ளனர். இரு சக்கர வாகனங்களுக்கு பூஜைபோட கட்டணமாக ரூ.50ம், கார், வேன்களுக்கு ரூ.200ம், பஸ், லாரிகளுக்கு ரூ.500ம் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

    3) வருடந்தோறும் அனுமன் பிறந்த மூல நட்சத்திர நாளில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் வடை மாலைகள் சாத்தப்படுகிறது.

    4) ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. இந்த விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    5) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் 2009ம் ஆண்டு நடந்தது.

    6) ஆஞ்சநேயர் செய்த வீர, தீர செயல்கள், சீதையிடம் ஆஞ்சநேயர் பேசியது, ராமரின் இதயத்தில் இடம் பெற்றது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் ஓவியங்களாக வடிவமைத்து வைக்கப்பட்டு உள்ளது.

    7) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்படும் துளசி, வெற்றிலை மாலைகள் மற்றும் பூமாலைகள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

    8) ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துதல் மற்றும் முத்தங்கி அலங்காரம் உள்ளிட்ட கட்டளைதாரர் சேவைக்கான முன்பதிவு கோவில் அலுவலகத்தில் நடந்து வருகிறது.

    9) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத் தேர் உண்டு. பணம் கட்டியவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் மாலை 6.30 மணிக்கு தங்கத்தேரை இழுக்கலாம்.

    10) தமிழ் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் அபிஷேகத்தில் சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    11) மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணைந்து வரும் நாளில் ஆஞ்சநேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

    12) அமாவாசை, பவுர்ணமி, ஆடிப்பூரம், வைகாசி விசாகம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப் படும்.

    13) ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்ய உயரமான இரும்பு ஏணி உள்ளது.

    14) ஆஞ்சநேயருக்கு சாத்தப்படும் வெண்ணெய் பக்தர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

    15) நாமக்கல் நரசிம்மரின் அவதாரங்கள் கோவிலின் மேற்கூரையில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    16) ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    17) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்க கவசம் அலங்காரமும் முத்தங்கி அலங்காரமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த அலங்காரத்தில் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.

    18) நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால் நவகிரகங்களை வழிபட்டதற்கு இணையானது என்பதால் நவகிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய சுவாமியை வழிபட ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.

    19) 18 அடி உயரமுள்ள ஒற்றை கல்லினால் ஆன ஆஞ்சநேயருக்கு கோபுரம் கிடையாது. வெட்ட வெளியில் மழையிலும், வெயிலிலும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    20) வெளிநாட்டு பக்தர்களையும் வியக்க வைக்கும் இந்த கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது.

    21) நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். அவருக்கு நெய் தீபம் மற்றும் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    22) ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு செந்தூர காப்பு செய்வார்கள். ஆனால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு செந்தூர காப்பு செய்வது கிடையாது.

    23) நாமக்கல் ஆஞ்சநேயரை முத்தங்கி சேவை அலங்காரத்தில் தரிசிப்பதன் மூலம் ராஜயோகம் கிட்டும்.

    25) நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று 1 லட்சத்து 8 வடை மாலையாக அணிவிக்கப்படுகிறது.

    26) எந்தவித அலங்காரமும் இல்லாமல் சாதாரண தோற்றத்தில் உள்ள ஆஞ்சநேயரை தரிசித்தால் காரியத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

    27) இச்சா சக்தி (நாமகிரி அம்மன்), கிரியாசக்தி (நரசிம்மர்), ஞானசக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.

    28) ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இன்றே நடக்கும். வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிட்டும்.

    29) தமிழக அரசின் அன்னதான திட்டத்தில் நாள் ஒன்றுக்கு அன்னதானம் வழங்க ரூ.2500, ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் அன்னதானம் வழங்க வைப்பு நிதியாக ரூ.25 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    30) ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் நித்திய கட்டளை பூஜையில் கலந்துகொள்ள வைப்பு நிதியில் ரூ.5 ஆயிரம் செலுத்தி அதில் வரும் வட்டியை கொண்டு நித்திய கட்டளை பூஜை நடத்தப்படுகிறது.

    • பீடத்திலிருந்து 22அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்ட, ஆஞ்சநேயர் முகம் தேஜஸ் ஔியில் மிளிர்கிறது.
    • ஒரே கல்லில் செதுக்கப் பட்ட ஆஞ்சநேயர் சிலை பிரம்மாண்டத்தின் பிம்பமாக நிற்கிறது.

    நாமக்கல் ஆஞ்சநேயர் வானமே கூரையாக திறந்த வெளியில், தொழுத கைகளுடனும், இடுப்பில் கத்தியோடும் ஆஜானுபாகுவாக நின்று சிந்தையை ஈர்க்கும் ஆஞ்சநேயர் சிற்பம், ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பு.

    ஒரே கல்லில் செதுக்கப் பட்ட ஆஞ்சநேயர் சிலை பிரம்மாண்டத்தின் பிம்பமாக நிற்கிறது.

    பீடத்திலிருந்து 22அடியும், பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்ட, ஆஞ்சநேயர் முகம் அழகிய தேஜஸ் ஒளியில் மிளிர்கிறது.

    காற்று, மழை, வெயில், புயல் என்று இயற்கை சீற்றங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்று அருட்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்.

    லோகநாயகனான ஸ்ரீநரசிம்மரே (எதிரில் உள்ள ஆலயம்) கிரி உருவில் மேல் விதானம் இல்லாமல் இருப்பதால் தாசனான எனக்கும் விதானம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் திறந்த வெளியில் கோபுரம் இல்லாமல் நின்றிருக்கிறார் என்பதும், நாமக்கல் ஆஞ்சநேயர் நாளுக்கு நாள், வளரும் அபூர்வ சக்தி கொண்டவர்.

    அதனால் அவரை ஒரு கட்டுமானத்திற்குள் வைக்காமல் காற்று வெளியில் பிரதிஷ்டை செய்துள்ளனர் என்பதும் பக்தர்களின் கூற்று.

    • ராமர் நலமாக உள்ள விபரங்களைச் சீதையிடம் அனுமன் தெரிவித்தார்.
    • ஆனால் அப்போது சீதைக்கு அட்சதை போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

    இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டுச் சென்றார்.

    நீண்ட தேடுதலுக்குப் பிறகு சீதை அசோக வனத்தில் இருப்பதை அவர் கண்டு பிடித்தார்.

    ராமர் நலமாக உள்ள விபரங்களைச் சீதையிடம் அனுமன் தெரிவித்தார்.

    பிறகு ராமர் தந்த மோதிரத்தை சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர். சீதாதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

    பணிவுடன் வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று சீதாதேவி விரும்பினாள்.

    ஆனால் அப்போது சீதைக்கு அட்சதை போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

    இதனால் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து அதன் இலைகளைப் பறித்து, அதை அனுமன் மீது தூவி, மனதார ஆசீர்வதித்தாள்.

    அந்த வெற்றிலைகளை மாலையாகவும் கட்டி அனுமனுக்குப் போட்டு மகிழ்ச்சியடைந்தாள்.

    சீதா பிராட்டியார் கையால் கிடைத்த இந்த வெகுமதியை ஸ்ரீ ஆஞ்சநேயரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

    அன்று முதல் அனுமனுக்கு வெற்றிலை மாலை போடும் வழக்கம் ஏற்பட்டது.

    பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்கும் வெற்றிலையை சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது.

    என்றாலும் அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை சிறப்புக்குரியதாக மாறுகிறது.

    அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும் போது வெற்றிலையின் எண்ணிக்கை 2, 4, 6, 8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

    வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

    ஆகவே, ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாகக் கட்டி போடும் போது, இவ்வாறே இரண்டு வெற்றிலை ஒரு பாக்கு அல்லது நான்கு வெற்றிலை மூன்று பாக்கு என்பதாக இருக்க வேண்டும்.

    மேலும் வெற்றிலையை நரம்பில்லாத முன்பகுதி வெளியில் தெரியுமாறு மடித்து, வாழை நார் போன்றவற்றைக் கொண்டு, மாலையாகத் தொடுத்துப் போடலாம்.

    ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இனிதே நடக்கும், நல்ல வேலை கிடைக்கும்.

    பதவி உயர்வும் கிடைக்கப்பெறும். மேலும் கடன்தொல்லையும் நீங்கும்.

    இதனால் பக்தர்கள் நேர்த்திக்கடனாக நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும் அணிவிக்கிறார்கள்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், கரூர் மாவட்டம் குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்கிறார்கள்.

    வெற்றிலை விவசாயிகள் தங்களுடைய பயிரில் நோய் வராமல் காத்து நன்றாக வெற்றிலையை அறுவடை செய்தால் வெற்றிலை மாலையை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

    • ஒரு காலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடி மக்களின் தாகம் தீர்த்தது இந்த குளம்.
    • கமலாலய குளத்தில் ஆஞ்சநேயர் பாதம் அமைந்துள்ளது.

    ஒரு காலத்தில் நீர் பெருக்கெடுத்து ஓடி மக்களின் தாகம் தீர்த்தது இந்த குளம்.

    கமலாலய குளத்திற்கும், நாமகிரித் தாயாருக்கும், நரசிம்ம மூர்த்திக்கும், ஆஞ்சநேயருக்குமான பிணைப்பு வியப்புக்குரியது.

    நாமகிரித் தாயாரும், ஆஞ்சநேயரும் நீராடி வழிபட்ட கமலாலயக் குளத்திற்குள் 7 கிணறுகள் இருப்பது கூடுதல் சிறப்பு.

    ஆஞ்சநேயர் பாதம்

    கமலாலய குளத்தில் ஆஞ்சநேயர் பாதம் அமைந்துள்ளது.

    குளத்தில் தண்ணீர் வற்றும் சமயத்தில் அதை காண முடியும்.


    • நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஏறத்தாழ 136 ஏக்கர் பரப்பளவில் ஒரே கல்லினால் ஆன பெரிய மலை உள்ளது.
    • சாலக்கிராமம் என்பது விஷ்ணுவுக்கு உகந்த தெய்வீக கல் ஆகும்.

    லட்சுமி கடாட்சம் அருளும் கமலாலய குளம்

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஏறத்தாழ 136 ஏக்கர் பரப்பளவில் ஒரே கல்லினால் ஆன பெரிய மலை உள்ளது.

    இந்த மலையின் உயரம் 75 மீட்டர் (246 அடி) ஆகும்.

    சுற்றிலும், கமலாலய குளம், ஜெட்டி குளம், திருப்பாகுளம் ஆகியவை உள்ளன.

    கமலாலய குளம் புராண கால சிறப்புகளை உடையது.

    ராமாயண காலத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து கொண்டு இலங்கைக்கு செல்லும் வழியில், நாமக்கல் வந்தார்.

    அப்போது அவருக்கு, சாலக்கிராமம் கிடைக்க பெற்றார்.

    சாலக்கிராமம் என்பது விஷ்ணுவுக்கு உகந்த தெய்வீக கல் ஆகும்.

    அப்போது 'உனக்கு கிடைக்க பெற்றதை எந்த இடத்தில் வைக்கிறாயோ,

    அந்த இடம் மலையாக மாறிவிடும்' என்ற அசரீரி வார்த்தை கேட்டது.

    இந்த தலத்திற்கு ஆஞ்சநேயர் வந்தபோது, சந்தியாவந்தனம் செய்வதற்காக கமலாலய குளத்தில் இறங்கினார்.

    அப்போது சாலக்கிராமத்தை எப்படி கீழே வைப்பது என்று யோசித்த போது, அங்கு மகாலட்சுமி தவம் செய்து கொண்டு இருப்பதை கண்டார்.

    மகாலட்சுமியிடம் தான் தியானம் செய்யும் வரை சாலக்கிராமத்தை கீழே வைத்து விடாமல் கையிலேயே வைத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    நேரம் அதிகமாகவே ஆஞ்சநேயர் மறந்து விட்டார் என நினைத்து மகாலட்சுமி சாலக்கிராமத்தை கீழே வைத்து விட்டார்.

    சந்தியா வந்தனம் முடித்து வந்து பார்த்த போது தனக்கு முன்பு பெரிய மலை உருவாகி இருப்பதை ஆஞ்சநேயர் கண்டார் என்பதும், அந்த மலையே நாமகிரி மலை என்றும் இதன் தல வரலாறு கூறுகிறது.

    மலை அடிவாரத்தில் மகாலட்சுமி வாசம் செய்யும் குளம்தான் கமலாலய குளம்.

    கமலம் என்றல் தாமரை என பொருள். தாமரையில் அமர்ந்தபடி லட்சுமி அருள்பாலிக்கும் குளம் என்பதால் இதை கமலாலய குளம் என்கின்றனர்.

    இந்த குளத்து தீர்த்தம் புண்ணியமிக்கது. லட்சுமி கடாட்சம் அருளக்கூடியது என்கின்றனர் ஆன்மீகவாதிகள்.

    எனவே இந்த தீர்த்த குளத்து நீரை வீடுகளில் தெளித்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும் என்கிறார்கள்.

    ×