என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ரசிகை"
- கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பையின் போதும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை பார்க்க ரசிகை வந்திருந்தார்.
- கேமரா கவனத்திற்காக இவ்வாறு நடப்பதாக ஒரு பயனரும், கோலி ஒரு உலகளாவிய ஐகான் என சில பயனர்களும் பதிவிட்டு வருகின்றனர்.
உலக கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் நேற்று முன்தினம் நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகை ஒருவர், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் படம் மற்றும் அவரது ஜெர்சி எண் 18 ஆகியவற்றை குறிப்பிடும் வகையில் அணிந்திருந்த செயின் (லாக்கெட்) இணையத்தில் வைரலானது. அவரது படத்துடன் வைரலான வீடியோவில், நியூயார்க் மைதானத்தில் விராட் கோலியின் படத்துடன் கூடிய லாக்கெட்டை கழுத்தில் அணிந்திருந்த பாகிஸ்தான் ரசிகை என பதிவிடப்பட்டிருந்தது.
இந்த ரசிகை ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பையின் போதும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டத்தை பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய 2 அணிகளையும் நான் ஆதரிக்கிறேன் என அவர் பேட்டி அளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது அவர் கோலி படத்துடன் கூடிய லாக்கெட்டை அணிந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கேமரா கவனத்திற்காக இவ்வாறு நடப்பதாக ஒரு பயனரும், கோலி ஒரு உலகளாவிய ஐகான் என சில பயனர்களும் பதிவிட்டு வருகின்றனர்.
Pakistani girl wearing Virat Kohli's pendant despite him being their biggest nightmare pic.twitter.com/PZCqjSWLr9
— Pari (@BluntIndianGal) June 9, 2024
- பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நீங்கள் கோலிக்கு ஆதரவாக இருக்கிறீர்களே என ரசிகையிடம் கேள்வி கேட்டனர்.
- ரசிகையின் ஒரு கன்னத்தில் பாகிஸ்தான் கொடி, மற்றொரு கன்னத்தில் இந்திய தேசிய கொடி வரையப்பட்டிருந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு பாகிஸ்தான் ரசிகை ஒருவர் பாராட்டு தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று முன்தினம் போட்டி ரத்தான நிலையில் ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியே வந்தனர். அப்போது இரு நாட்டு ரசிகர்களிடம் பேட்டி எடுத்தனர். பாகிஸ்தான் ரசிகை ஒருவர் கூறும் போது, விராட் கோலி என்னுடைய பேவரைட் பிளேயர். நான் அவரது தீவிரமான ரசிகை. அவரை பார்ப்பதற்காகதான் இங்கு வந்தேன். இந்த போட்டியில் அவர் சதம் அடிப்பார் என நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் அவரை பார்த்தது மகிழ்ச்சியே என்றார்.
அப்போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நீங்கள் கோலிக்கு ஆதரவாக இருக்கிறீர்களே என கேள்வி கேட்டனர். அதற்கு அந்த இளம்பெண் தனது கன்னத்தை காட்டினார். அதில் ஒரு கன்னத்தில் பாகிஸ்தான் கொடி, மற்றொரு கன்னத்தில் இந்திய தேசிய கொடி வரையப்பட்டிருந்தது. அப்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தலையை நீட்டி எதிர்ப்பு தெரிவிக்க முயன்ற போது அந்த இளம்பெண், அங்கிள் நாம் அண்டை நாட்டுகாரர்களை நேசிப்பது ஒன்றும் மோசமான விஷயம் இல்லை என பதிலடி கொடுத்தார்.
பின்னர் அந்த ரசிகையிடம் கோலி அல்லது பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்றால் உங்களின் விருப்பம் யாராக இருக்கும் என்ற கேள்விக்கு அவர் விராட் கோலி என பதில் அளித்தார். அவரது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- பாகிஸ்தான் ரசிகையான நடாஷா இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட வாழ்த்து தெரிவித்தார்.
- 20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர் கொள்ள விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான், ரிஸ்வான் தெரிவித்து உள்ளனர்.
20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 153 என்ற இலக்கை துரத்தியதில் அவர்கள் 7 விக்கெட்டுகள் மற்றும் 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றனர். பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.
இந்த போட்டியில் பெரிதும் வைரலானது பாகிஸ்தான் ரசிகை ஒருவர். பாகிஸ்தான் ரசிகையின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் ரசிகையான நடாஷா பாகிஸ்தானுடன் இந்தியா இறுதிப் போட்டியில் விளையாட வாழ்த்து தெரிவித்தார். பாபர் ஆசம் தலைமையிலான அணி ரோகித் சர்மா தலைமையிலான அணியை வெற்றி பெறும் என கூறினார். நம்பிக்கையுடன், இந்தியா இறுதிப் போட்டிக்கு வரும். நாம் அவர்களை வீழ்த்த வேண்டும்.
பாகிஸ்தான் அணியுடன் இறுதிப்போட்டியில் இந்தியாவே விளையாட வேண்டும் என்பது கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனையே முன்னாள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களும் எதிர்நோக்கி உள்ளனர். அதுமட்டுமன்றி பாகிஸ்தான் வீரர்களும் இந்தியாவுடனே மோத விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை எதிர் கொள்ள விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான், ரிஸ்வான் தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் அணியின் ஆலோசகரான மாத்யூ ஹைடன் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சளரான சோயப் அக்தரும் இந்தியவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் விளையாட விரும்புவதாக தெரிவித்து உள்ளனர். எனவே பலரது எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா தனது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை இன்று எதிர்கொள்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்