search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில அரசு விருது"

    • நடிகர் கிச்சா சுதீப் கடிதம் எழுதியுள்ளார்.
    • தகுதியான நடிகர்கள் பலர் உள்ளனர்.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒரவர் கிச்சா சுதீப். பெரும்பாலும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வரும் கிச்சா சுதீப் தனது நேர்த்தியான நடிப்பு திறமையால் புகழ் பெற்றுள்ளார். இவர் நடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளன.

    இந்த நிலையில், கர்நாடக மாநில அரசு வழங்கும் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் கிச்சா சுதீப் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக மாநில அரசு மற்றும் தேர்வு குழுவுக்கும் நடிகர் கிச்சா சுதீப் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "மரியாதைக்குரிய கர்நாடக அரசு மற்றும் நடுவர் மன்ற உறுப்பினர்களே,

    சிறந்த நடிகர் பிரிவின் கீழ் மாநில விருதைப் பெற்றிருப்பது உண்மையிலேயே ஒரு பாக்கியம். இந்த கௌரவத்திற்காக மரியாதைக்குரிய நடுவர் மன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இருப்பினும், பல ஆண்டுகளாக விருதுகளை பெறுவதை நான் நிறுத்தியதோடு இன்றும் அதே முடிவில் உறுதியாக இருக்கிறேன்.

    இந்த முடிவு பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக எடுக்கப்பட்டது. தங்கள் படைப்பில் முழு முயற்சியுடன் பணியாற்றும் தகுதியான நடிகர்கள் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் அதைப் பெறுவதைப் பார்ப்பது எனக்கு அதிக மகிழ்ச்சியை தரும்.

    மக்களை மகிழ்விப்பதற்கான எனது அர்ப்பணிப்பு எப்போதும் விருதுகளை எதிர்பார்க்காமல் இருந்து வருகிறது. நடுவர் மன்றத்தின் இந்த அங்கீகாரம் மட்டுமே சிறந்து விளங்க என்னை தொடர்ந்து பாடுபட வைக்கும் ஊக்கமாக அமைகிறது.

    இந்த அங்கீகாரம் மட்டுமே என் வெகுமதி என்பதால், என்னை தேர்ந்தெடுத்த நடுவர் மன்ற உறுப்பினர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது முடிவு ஏற்படுத்தக்கூடிய ஏமாற்றத்திற்கு நடுவர் மன்ற உறுப்பினர்களிடமும் மாநில அரசிடமும் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் எனது முடிவை மதித்து, நான் தேர்ந்தெடுத்த பாதையில் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    மீண்டும் ஒருமுறை, எனது பணியை அங்கீகரித்து இந்த விருதுக்கு என்னை பரிசீலினை செய்ததற்காக நடுவர் மன்ற உறுப்பினர்களுக்கும் மாநில அரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தேசிய பெண் குழந்தை தினத்தில் விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் 15-ந்தேதி வரை வரவேற்கப்படுகின்றன.
    • விருதினை பெற உரிய நபர் தேர்ந்டுதெக்கப்பட்டு 24.01.2023 அன்று மாநில அரசின் விருது வழங்கப்படவுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தமிழக அரசின், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் "பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்த பெண்குழந்தைகள்.

    வேறு வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தலும், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக ஓவியங்கள், கவிதைகள், மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியிருத்தல் போன்ற சாதனை புரிந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் மாநில அரசின் விருது தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

    அதே போன்று, வருகிற 24 ஜனவரி 2023-ல் தேசிய பெண் குழந்தை தினத்தில் விருது வழங்கிட 18 வயதிற்குட்பட்ட தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் 15-ந்தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

    இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் தலைமையாசிரியர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் சமூகநல ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மாவட்டங்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவிலான தேர்வு குழு மூலம் கூர்ந்தாய்ந்து மேற்காணும் விருதினை பெற உரிய நபர் தேர்ந்டுதெக்கப்பட்டு 24.01.2023 அன்று மாநில அரசின் விருது வழங்கப்படவுள்ளதாக மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    ×