என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக நிர்வாகி மரணம்"
- யாத்திரை கணேசன் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்ட போது காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
- யாத்திரை கணேசன், குமரி அனந்தன் தலைமையில் நடைபெற்ற பல்வேறு நடைப் பயணங்களிலும், சமீபத்தில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக பாத யாத்திரையிலும் தம்மை இணைத்துக் கொண்டவர்.
சென்னை:
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் யாத்திரை கணேசன் (53). காங்கிரஸ் சேவாதள நிர்வாகியான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் நடத்திய பேரணிகளில் கலந்து கொண்டவர்.
இப்போது ராகுலின் பாரத ஒற்றுமை யாத்திரையில் கன்னியாகுமரியில் இருந்து தொடர்ந்து யாத்திரையில் நடந்து சென்றார். நேற்று மகாராஷ்டிராவில் நடைபயணம் சென்ற கணேசன் விபத்தில் சிக்கி பலியானார்.
யாத்திரை கணேசன் மறைவுக்கு ராகுல்காந்தி அனுதாபம் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
யாத்திரை கணேசன் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்ட போது காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இவர், குமரி அனந்தன் தலைமையில் நடைபெற்ற பல்வேறு நடைப் பயணங்களிலும், சமீபத்தில் நடைபெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக பாத யாத்திரையிலும் தம்மை இணைத்துக் கொண்டவர்.
திருமணம் செய்து கொள்ளாமலேயே முழு நேர ஊழியராக கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.