என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவசாயிகள் புலம்பல்"
- தொடர்ந்து கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.
- ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 46 கிராம ஊராட்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. கண்டமங்கலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் உள்ள சாலை மிக முக்கியமான சாலை. இச்சாலை அம்பேத்கர் நகர் பகுதிக்கு செல்லும் சாலை. இதேபோல கண்டமங்கலம் சுடுகாட்டு பாதையும் இது தான்.இப்படி மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையில் மக்கள் குடியிருப்பு நிறைந்த பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல கண்டமங்கலம் ஒன்றியத்தில் மழைநீர் விவசாய நிலங்களில் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கரும்பு, வாழை, கத்தரிக்காய் செடிகள், பூச்செடிகள், சவுக்கு பயிர்கள் மழைநீர் தேங்கி நிற்பதால் அழுகும் நிலை உள்ளது. மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் அதிக அளவு மழை நீர் சூழ்ந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கு அழுகிவிடும் என விவசா யிகள் புலம்பி வருகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். பல இடங்களில் மின் மோட்டா ர்கள் மூலம் புகுந்த வெள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர். பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் வெளியேற்ற முடியாமலும் உண்ண உணவின்றியும் பொது மக்கள் பெரிதும் கஷ்டப்படு கின்றனர். பல இடங்க ளில் தாழ்வான பகுதியில் குடியிருக்கும் பொது மக்களை கண்ட மங்க லம் ஒன்றிய குழு தலை வர் ஆர்.எஸ்.வாசன், துணை த்தலைவர் நஜீரா பேகம்தமின், கண்டமங்க லம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் அறிவுறு த்தலின் பேரில் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவ ர்கள் அந்தந்த பகுதி ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கண்டமங்கலம் பகுதியில் தொடர் மழை காரணமாக பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய அதிகாரிகளும் பணியாளர்களும் இரவு பகலாக கொட்டும் மழை யையும் பொருட்படுத்தா மல் சாய்ந்த மின்கம்பங்களை சரிசெய்து பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்