என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனோஜ் பாண்டே"

    • எதையும் சமாளிக்கும் வகையில் இந்திய படைகள் தயாராக உள்ளன.
    • குளிர்காலம் தொடங்கியவுடன் சில படைப்பிரிவுகள் திரும்ப வாய்ப்பு

    லடாக் எல்லை பகுதியில் கடந்த 30 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள இந்தியா-சீன படைகளின் நிலை குறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறியுள்ளதாவது:

    கிழக்கு லடாக்கில் நிலைமை நிலையானது என்றாலும் கணிக்க முடியாத வகையில் உள்ளது. டெம்சோக் மற்றும் டெப்சாங் பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது குறித்த இரு நாடுகள் இடையேயான அடுத்த சுற்று ராணுவ பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்படுகிறது.

    உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் சீன துருப்புக்களின் பலத்தில் எந்தக் குறைவும் இல்லை. எனினும் குளிர்காலம் தொடங்கியவுடன் சில படைப்பிரிவுகள் திரும்புவதற்கான அறிகுறிகள் இருக்கிறது. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே சீனாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தடையின்றி நடந்து வருகிறது.

    அவர்கள் (சீன ராணுவத்தினர்) ஹெலிபேடுகள், விமானநிலையங்கள் மற்றும் சாலைகளை அமைத்து வருகின்றனர். எங்களை பொருத்தவரை, எத்தகைய செயல்களையும் சமாளிக்கும் வகையில் போதுமான படைகள் மற்றும் போதுமான இருப்புக்கள் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம்.

    எங்களின் நலன்கள் மற்றும் உணர் திறன் இரண்டையும் பாதுகாக்கும் வகையில், சீன ராணுவம் மீதான நமது நடவடிக்கைகளை மிகவும் கவனமாக அளவீடு செய்யப்படுகின்றன. அனைத்து வகையான தற்செயல்களையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.
    • இவரது பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய ராணுவ தளபதியாக பதவி வகித்து வருபவர் மனோஜ் பாண்டே. இவர், 2022 ஏப்ரல் 20-ம் தேதி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

    இந்நிலையில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.

    • பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளது.
    • ஏப்ரல் 2022-ல் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் பதவியை வகித்தார்.

    ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலத்தை ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஜெனரல் பாண்டே 25 மாத பதவிக்காலத்திற்குப் பிறகு மே 31 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார்.

    இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மே 26ம் தேதி அன்று அமைச்சரவையின் நியமனக் குழு, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் சி பாண்டேவின் பணியை ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

    அவரது ஓய்வு வயதைத் தாண்டி (மே 31), அதாவது ஜூன் 30 வரை, இராணுவ விதிகள் 1954 இன் 16 ஏ (4) விதியின் கீழ் நீட்டிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜெனரல் பாண்டேவுக்குப் பிறகு இரண்டு உயர் அதிகாரிகளும் பதவி உயர்வு பெற வேண்டிய நிலையில், ராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் பாண்டேவுக்கு ஒரு மாதம் நீட்டிப்பு கிடைத்துள்ளது.

    ஜெனரல் பாண்டே கடந்த டிசம்பர் 1982- ல் கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸில் (தி பாம்பே சப்பர்ஸ்) நியமிக்கப்பட்டார். 40 ஆண்டுகளுக்கும் மேலான அவரது ராணுவ பணியில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் சீனாவுக்கு எதிராகப் பாதுகாப்புப் பொறுப்பு வகிக்கும் கிழக்கு ராணுவக் கட்டளைத் தளபதியாக அவர் பணியாற்றினார்.

    அவர் ஏப்ரல் 2022-ல் ராணுவப் பணியாளர்களின் துணைத் தலைவர் பதவியை வகித்தார்.

    • ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம், அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தலைமை அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.
    • ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மே 31-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஒரு மாதம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

    இந்திய ராணுவத்தின் 29-வது ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே கடந்த மே 2022-ம் ஆண்டு பதவியேற்றார்.

    அதற்கு முன், ஜெனரல் மனோஜ் பாண்டே துணை தளபதியாக இருந்தார். இவர் ராணுவத்தின் என்ஜினீயர்ஸ் படை பிரிவில் இருந்து ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற முதல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம், அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தலைமை அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

    ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மே 31-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவருக்கு ஜூன் 30 வரை ஒரு மாதம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

    மனோஜ் பாண்டே பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 26 மாத பதவிக்காலத்திற்கு பிறகு இன்று அவர் ஓய்வு பெறுகிறார்.

    ×