என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வீடு இடிந்து சேதம்"
- தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
- கனமழைக்கு போடி 2-வது வார்டு பகுதியில் வீடு இடிந்து விழுந்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 2-வது வார்டு புதூர் பகுதியில் செல்வம் மனைவி ராசாத்தி(60) தனியாக வசித்து வருகிறார். நேற்றிரவு அவரது பேத்தி ரஞ்சனி(20) பாட்டி வீட்டுக்கு வந்தார். இரவில் 2 பேரும் தூங்கினர். அப்போதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது.
சிறிதுநேரத்தில் மேற்கூரையில் இருந்து பூச்சுகள் விழுந்ததால் சுதாரித்துக்கொண்ட 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறினர். சிறிதுநேரத்தில் வீட்டின் சுவர் முழுவதும் இடிந்து பொருட்கள் நாசமானது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் சரியான நேரத்திற்கு வெளியே வந்ததால் உயிர்தப்பினார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மாற்றுத்திறனாளியான பாட்டி சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார். தற்போது வீடும் சேதமடைந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.