என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வட மாநிலம்"
- டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாராந்திர விரைவு ரெயில்கள் ஜூன் 20 முதல் ஜூலை 8 வரை ரத்து செய்யப்படும்.
- பாலா்ஷா வழியாக வருவதற்கு பதிலாக வாராங்கல், நிஜாமாபாத், பிம்பல், மஜ்ரி வழியாக இயக்கப்படும்.
சென்னை:
செகந்திராபாத் ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணி காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில் தெற்கு ரெயில்வேக்குட்பட்ட தமிழ்நாடு, கேரளம் மற்றும் கா்நாடக மாநிலத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் 36 ரெயில்களின் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் விவரம்:-
சென்னை சென்ட்ரல்-ஜெய்ப்பூா் இடையே வாரம் இரு முறை இயக்கப்படும் விரைவு ரெயில் (எண் 12697/12698) ஜூன் 21 முதல் ஜூலை 7 வரை முற்றிலும் ரத்து செய்யப்படும். மைசூரில் இருந்து தா்பங்காவுக்கு ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக செல்லும் பாக்மதி விரைவு ரெயில் ஜூன் 25, ஜூலை 2 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 28, ஜூலை 5-ந்தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.
திருநெல்வேலி-பிலாஸ்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரெயில் ஜூன் 23, 30 தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 25, ஜூலை 2 தேதிகளிலும் ரத்து செய்யப்படும். மன்னாா்குடியில் இருந்து பகத் கி கோதி செல்லும் விரைவு ரெயில் ஜூன் 24, ஜூலை 1-ந் தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 27, ஜூலை 4-ந்தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.
மதுரை-பிகானோ் (ராஜஸ்தான்) இடையே இயக்கப்படும் அனுவ்ரத் விரைவு ரெயில் ஜூன் 20, 27, ஜூலை 4-ந்தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 23, 30, ஜூலை 7-ந்தேதிகளிலும் ரத்து செய்யப்படும். ஜபல்பூா்-மதுரை இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் ஜூன் 20, 27, ஜூலை 4 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக ஜூன் 22, 29, ஜூலை 6 தேதிகளிலும் ரத்து செய்யப்படும்.
அதேபோல், கேரளத்தின் கொச்சுவேலி, எா்ணாகுளம் மற்றும் கா்நாடகத்தின் பெங்களூா், யஷ்வந்த்பூரில் இருந்து பாட்னா, பாடலிபுத்திரம், பிலாஸ்பூா், இந்தூா், கோா்பா, தானாப்பூா், டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் வாராந்திர விரைவு ரெயில்கள் ஜூன் 20 முதல் ஜூலை 8 வரை ரத்து செய்யப்படும்.
புதுடெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் ராஜ்தானி அதிவிரைவு ரெயில் ஜூலை 3, 5 தேதிகளில் பாலா்ஷா வழியாக வருவதற்கு பதிலாக வாராங்கல், நிஜாமாபாத், பிம்பல், மஜ்ரி வழியாக இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரெயில் ஜூலை 2, 3, 4-ந்தேதிகளில் பாலா்ஷா வழியாக செல்வதற்கு பதிலாக வாராங்கல், பேடப்பள்ளி, நிஜாமாபாத், பிம்பல், மஜ்ரி வழியாக இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- தவுபிக் தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பல்லடம் :
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் தவுபிக்(வயது 37). இவர் பல்லடம் பனப் பாளையம் பகுதியில் உள்ள, தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்குச் செல்வதற்காக மில்லில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள், பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் தர மறுக்கவே அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த சுமார் ரூ. 10,000 மதிப்புள்ள செல்போன், ரொக்கம் ரூ.10,000 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதையடுத்து காயத்துடன் தொழிற்சாலைக்குச் சென்று அதன் உரிமையாளரிடம் கூறியுள்ளார். பின்னர் இது பற்றி பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்