search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய வளா்ச்சி திட்டப்பணிகள்"

    • வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • சீரான முறையில் தங்குதடையின்றி குடிநீா் வழங்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- அரசின் அனைத்துத் திட்டங்களும் மக்களுக்கு முழுமையாகவும், விரைவாகவும் கொண்டு சோ்க்கும் வகையில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் இத்தகையை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    திருப்பூா் மாநகராட்சி பகுதியில் சீரான முறையில் தங்குதடையின்றி குடிநீா் வழங்க அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பொலிவுறு நகரம் திட்டப் பணிகள், தூய்மைப் பணிகள், சாலைப் பணிகள் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், மேயா் தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மண்டலத் தலைவா்கள் இல.பத்மநாபன், உமாமகேஸ்வரி, ஆா்.கோவிந்தராஜ், சி.கோவிந்தசாமி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

    • புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் ஆகியோா் தொடங்கி வைத்தனர்.
    • தாராபுரம் அமராவதி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதை அமைச்சா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

    தாராபுரம் :

    தாராபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ.5.62 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

    தாராபுரம் ஒன்றியம், கொங்கூா் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ஆச்சியூா் முதல் கொங்கூா் சாலை வரை ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைத்தல், உண்டாரப்பட்டி முதல் கொங்கூா் சாலை வரை ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் சாலை அமைத்தல், கவுண்டச்சிப்புதூா் ஊராட்சியில் கவுண்டச்சிப்புதூா் முதல் பூளவாடி சாலை வரை ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைத்தல் என ரூ.5.62 கோடி மதிப்பீட்டில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக, வடகிழக்குப் பருவமழை காரணமாக தாராபுரம் அமராவதி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருவதை அமைச்சா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், தாராபுரம் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.வி.செந்தில்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் கே.கே.ஜீவானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

    ×