என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியார் நீர்வீழ்ச்சி"

    • ரம்மியமான அழகுடன் விளங்கும் இந்த மலைக்குச் சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்வார்கள்.
    • ரம்மியமான அழகுடன் விளங்கும் இந்த மலைக்குச் சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்வார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கல்வராயன் மலை இயற்கை அழகுடன் விளங்கும் மலைப் பகுதி. இங்கு பெரியார், மேகம், செருக்கலூர் என பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான அழகுடன் விளங்கும் இந்த மலைக்குச் சுற்றுலா பயணிகள் ஏராளமாக வந்து செல்வார்கள். விடுமுறை நாட்களிலும் பண்டிகை நாட்களிலும் வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமானோர் வந்து இயற்கை ரசிப்பது வழக்கம் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கும், மலையைச் சுற்றிப் பார்ப்பதற்கும், வெள்ளி மலையில் உள்ள பள்ளத்தாக்கில் படகு சவாரி செய்வதற்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி வருபவர்கள் நீர்வீ ழ்ச்சிகளில் குளிக்கும்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. "பொதுமக்கள் நலன் கருதி நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்குத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக கல்வராயன் பகுதியில் பெய்ந்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக குளிக்க தடை விதித்த போதிலும் அந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீர்வீழ்ச்சி பகுதிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் மலைபகுதி சாலையில் வரும் பொழுது மிகவும் ஜாக்கிரதையாகவும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மழைக்காலம் என்பதால் சாலைகளில் பாறைகள் புரண்டு வரும் என்பதால் கவனமுடன் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், மழைக்காலம் முடிந்த பிறகும் நீர்வீ ழ்ச்சிகளில் குளிப்பதற்கும் மலையைச் சுற்றிப் பார்ப்பதற்கும் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த பாதுகாப்புடன் வந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×