என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுபான்மையினர் அணி"

    • மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிவித்தார்.
    • விஜயலட்சுமி, கொண்டம்மாள், ஏ.ஆர். மணிவண்ணன், கார்த்திக், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. சிறுபான்மையினர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உடுமலை குட்டைதிடலில் உள்ள நமதுபிளாசா கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறுபான்மை மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். உடுமலை நகர பா.ஜ.க. தலைவர் கண்ணாயிரம் வரவேற்று பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹீம் கலந்து கொண்டு ஆேலாசனை வழங்கினார். மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிவித்தார்.

    கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினரும், உடுமலை மண்டல பார்வையாளருமான ஜோதீஸ்வரி கந்தசாமி, மாநில துணை தலைவர் பிஜூ, மாநில செயலாளர் ஜோசன், மாநில செயற்குழு உறுப்பினர் எட்வர்டு, மாவட்ட பார்வையாளர் சிவா, உடுமலை மண்டல் சிறுபான்மை அணி தலைவர் அமீர், நாகமாணிக்கம், தெய்வக்குமார், உமா குப்புசாமி, ஜோதிடர் முருகேசன், பாப்புலர் ரவி, தம்பிதுைர, பழனிசாமி, திருஞானம், செல்வராஜ், செல்வி, பால தண்டபாணி, கண்ணப்பன், விஜயலட்சுமி, கொண்டம்மாள், ஏ.ஆர். மணிவண்ணன், கார்த்திக், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×