என் மலர்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து அணி"
- குரூப் 12 சுற்றில் வாழ்வா? சாவா? போட்டியில் இலங்கையை வீழ்த்தியது.
- அரையிறுதியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது.
டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்றது. கத்துக்குட்டி அணிகள் ஜாம்பவான் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை? என்பது கடைசி லீக் ஆட்டம் வரை பரபரப்பாகவே சென்றது.
ஒன்றிரண்டு ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் சில அணிகளுக்கு சிக்கல் ஏற்படுத்தியது. குறிப்பாக குரூப் 1-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இடம் பிடித்திருந்தால் அரையிறுதி போட்டிக்கு முன்னேற கடும் போட்டி நிலவியது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை நியூசிலாந்து வீழ்த்தியது, ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது ஆகியவற்றின் மூலம் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்குள் போட்டி நிலவியது.
மேலும், அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழையால் இங்கிலாந்து வெற்றி பறிக்கப்பட்டது. இது அந்த அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. ஆனால், ஆஸ்திரேலியா போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஒரு புள்ளி கிடைத்ததால் சற்று மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
குரூப் 1-ன் கடைசி லீக்கில் இங்கிலாந்து இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பீல்டிங் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை 141 ரன்கள் சேர்த்தது. பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. அலேக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ரன்களும் அடிக்க 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பட்லர் மீண்டும் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்தது, பட்லர் 49 பந்தில் 80 ரன்களும், ஹேல்ஸ 47 பந்தில் 86 ரன்களும் சேர்த்தனர்.
நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் பட்லர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தானால் 137 ரன்களே அடித்தது. பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடிக்க இங்கிலாந்து 19 ஓவரில் இலக்கை எட்டி 2-வது முறையாக கோப்பையை வென்றது.
கடைசி மூன்று வாழ்வா? சாவா? ஆட்டங்களில் ஆசிய அணிகள் துவம்சம் செய்து இங்கிலாந்து கம்பீரமாக கோப்பையை வென்று சொந்த நாடு திரும்பியுள்ளது.
- ஜனவரி 25-ந்தேதியில் இருந்து மார்ச் 11-ந்தேதி வரை இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 25-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியும் (முதல் இரண்டு போட்டி), இங்கிலாந்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி நேற்று நள்ளிரவு ஐதராபாத் வந்தடைந்தது. ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா நேற்று தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் இன்று பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
இங்கிலாந்து அணி எந்தவிதமான பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் களம் இறங்க இருக்கிறது.
2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2-ந்தேதியும், 3-வது போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15-ந்தேதியும், 4-வது போட்டி பிப்ரவரி 23-ந்தேதி ராஞ்சியிலும், 5-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 7-ந்தேதி தரம்சாலாவிலும் தொடங்குகிறது.
#WATCH | Telangana: England cricket team players arrived at Rajiv Gandhi International Airport, Hyderabad, for the 5-match Test series. The first Test is scheduled to be played from January 25 at the Rajiv Gandhi International Stadium. (21.01) pic.twitter.com/y7YDnzjtQw
— ANI (@ANI) January 21, 2024
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதன்பின் தற்போதுதான் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது.
இங்கிலாந்து அணியில் இடம் பிடித்திருந்த ஹாரி ப்ரூக் கடைசி நேரத்தில் இந்திய தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலான லாரன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆடும் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி உள்ளது.மார்க்வுட் மட்டுமே வேகப்பந்து வீச்சாளர். டாம் ஹார்ட்லீ, ஜாக் லீச், ரெஹான் அகமது ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்கள். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வேகப்பந்து வீசக்கூடியவர் என்றாலும் அவர் கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்திருப்பதால் இந்த போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தொடருகிறார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் மட்டும் களம் காணுவது அபூர்வ நிகழ்வாகும். இதற்கு முன்பு 1888-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் மட்டும் இவ்வாறு ஒரே வேகப்பந்து வீச்சாளரை பயன்படுத்தி இருந்தது.
தனிப்பட்ட விஷயம் காரணமாக இந்திய வீரர் விராட் கோலி இந்த டெஸ்டில் விளையாடவில்லை. மூத்த வீரர்கள் ரஹானே, புஜாரா ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரில் ஒருவர் கூட இல்லாமல் இந்தியா டெஸ்ட் ஆடுவது 2011ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.
- 1,082-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, 5 லட்சம் ரன்களை குவித்துள்ளது.
- 3-வது இடத்தில் இந்தியா 2 லட்சத்து 78,751 ரன்கள் எடுத்துள்ளது.
வெலிங்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய பணித்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 280 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 125 ரன்களில் சுருண்டது.
இதனையடுத்து 155 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பென் டக்கெட் 92 ரன்களிலும், ஜேக்கப் பெத்தேல் 96 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 2-வது நாள் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 378 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து 533 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஜோ ரூட் 73 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் 1,082-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, 5 லட்சம் ரன்களை குவித்த ஒரே அணி என்ற உலக சாதனையை படைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 4 லட்சத்து 29 ரன்களை எடுத்துள்ளது. 3-வது இடத்தில் இந்தியா 2 லட்சத்து 78,751 ரன்கள் எடுத்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த அணிகள்:-
5,00,126 - இங்கிலாந்து (1082 போட்டிகள், 18,954 இன்னிங்ஸ்)
4,29,000 - ஆஸ்திரேலியா (868 போட்டிகள், 15,183 இன்னிங்ஸ்)
2,78,751 - இந்தியா (586 போட்டிகள், 10,119 இன்னிங்ஸ்)
- முதல் டி20 போட்டி ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.
- 2 அணிகளுக்கும் ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
முதலில் டி20 தொடரும் அதற்கடுத்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளது. அதன்படி முதல் டி20 போட்டி ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2 அணிகளுக்கும் ஜோஸ் பட்லர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இதே இங்கிலாந்து அணியே விளையாடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சாம்பியன்ஸ் டிராபி மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி சுமித், லியாம் லிவிங்ஸ்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், ஜோ ரூட், சாகிப் மக்மூத், பில் சால்ட், மார்க் உட்
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி சுமித், லியாம் லிவிங்ஸ்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், சாகிப் மக்மூத், பில் சால்ட், மார்க் வுட்
- நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து டி20 தொடரில் 2 போட்டி முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை நடக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.
நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷிவம் துபேக்கு வாய்ப்பு வழங்கப்படும். காயத்தால் விலகிய நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அவர் இடம் பெறலாம்.
இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றங்கள் ஏதுமின்றி அதே அணியுடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
3-வது டி20 போட்டிக்கான இங்கிலாந்து ஆடும் லெவன்:-
பில்சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன், ஜேமி சுமித், ஒவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க்வுட், பிரைடன் கார்ஸ்.