என் மலர்
நீங்கள் தேடியது "நல்லுறவு விளையாட்டு போட்டி"
- போலீசாரின் மன அழுத்தத்தை போக்கவும், பொதுமக்கள் இடையே நல்லுறவை பேணும் வகையிலும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
- முதல் பரிசு உத்தமபாளையம் கோட்ட போலீஸ் அணி, 2-ம் பரிசு ஹை டெக் ராயல் அணி, 3-ம் பரிசை கம்பம் கள்ளர் பள்ளி அணிகளுக்கும் வழங்கப்பட்டது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தில் போலீசாரின் மன அழுத்தத்தை போக்கவும், பொதுமக்கள் இடையே நல்லுறவை பேணும் வகையிலும் விளையாட்டுப் போட்டிகள் கம்பம் ஏல விவசாயிகள் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஓட்டப்பந்தயம், வாலிபால், கபடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
அதன் பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் உத்தமபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளர் மதுக்குமாரி கலந்து கொண்டு போலீசார் மற்றும் பொதுமக்கள் சார்பில் பங்கேற்ற இளைஞர்களுக்கு உடல் திறன் பேணிக்காத்தல் அதன்மூலம் கிடைக்கப்பெறும் பலன்கள் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
மேலும் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் முதல் பரிசு உத்தமபாளையம் கோட்ட போலீஸ் அணி, 2-ம் பரிசு ஹை டெக் ராயல் அணி, 3-ம் பரிசை கம்பம் கள்ளர் பள்ளி அணிகளுக்கும் வழங்கப்பட்டது. இதில் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன், ஏலவிவசாயிகள் மேல்நிலை பள்ளி தாளாளர் திருமலைசேகர், ஆர்.ஆர் பள்ளி தாளாளர் அசோக், மற்றும் பயிற்சி பள்ளி அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்பட விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.