search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் ஆரிப்முகமது கான்"

    • பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்குவது தொடர்பாகவும், மாநில அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
    • கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்து திருவனந்தபுரத்தில் இன்று கம்யூனிஸ்டு பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணிக்கும், கவர்னர் ஆரிப்முகமது கானுக்கும் மோதல் நிலவி வருகிறது. அரசு விவகாரங்களில் கவர்னர் தலையிடுவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டினார். கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என்றும் அவர் கூறினார்.

    பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்குவது தொடர்பாகவும், மாநில அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்து திருவனந்தபுரத்தில் இன்று கம்யூனிஸ்டு பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்த போராட்டத்திற்கு தடை கேட்டு பா.ஜ.க. மாநில தலைவர் சுரேந்திரன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் போராட்டம் நடத்த தடை இல்லை என கேரள ஐகோர்ட்டு கூறிவிட்டது. இதைத் தொடர்ந்து இன்று திருவனந்தபுரத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ஏராளமான கம்யூனிஸ்டு தொண்டர்கள் பங்கேற்றனர்.

    ×