search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொல்லார்டு"

    • பிரிமீயர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்து வருகிறது
    • இதில் நேபாள வீரர் திபேந்திர சிங் டி20போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசினார்.

    அல் அமிராட்:

    ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பிரிமீயர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்துவருகிறது. இதில் அல் அமிராட்டில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நேபாளம், கத்தார் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த நேபாளம் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. அந்த அணியின் திபேந்திர சிங் அய்ரீ, வேகப்பந்து வீச்சாளர் கம்ரன் கான் வீசிய கடைசி ஓவரில் 6 பந்துகளையும் தொடர்ந்து சிக்சருக்கு தூக்கி அசத்தினார். இதன்மூலம் திபேந்திர சிங் சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனை படைத்தார்.

    ஏற்கனவே இந்தியாவின் யுவராஜ் சிங் (2007), வெஸ்ட்இண்டீசின் பொல்லார்டு (2021) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு நடந்த மங்கோலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொல்லார்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார் ரோகித் சர்மா.
    • இருவரும் இணைந்து விளையாடிய நாட்களை நினைவு கூர்ந்தார் பும்ரா.

    வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிரன் பொல்லார்ட், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான அவரது ஆட்டத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பொல்லார்டு அறிவித்தது ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    இந்நிலையில் பொல்லார்டுடன் இணைந்த ஒரு படத்தை தமது சமூக வளைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ரோகித் சர்மா, அவர் உண்மையான லெஜண்ட் என்று குறிப்பிட்டுள்ளார். பெரிய மனிதர், பெரிய தாக்கம், எப்போதும் இதயபூர்வமாக விளையாடினார் என்று ரோகித் தெரிவித்துள்ளார். 


    இதேபோல் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பொல்லார்ட் ஒரு போதும் விடைபெற முடியாது, மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்துக்கள், உங்களின் இருப்பு அனைவருக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


    இதேபோல் பொல்லார்ட் உடன் விளையாடிய நாட்களை நினைவு கூர்ந்துள்ள ஜஸ்பிரித் பும்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,எங்களுடன் களத்தில் இல்லாதது உங்களுக்குப் பழகிவிடும், ஆனால் வலை பயிற்சியின் போது எங்கள் கேலிகளை நான் இன்னும் ரசிக்கிறேன். புதிய இன்னிங்ஸ் மற்றும் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

    • ஐந்து ஐ.பி.எல். டிராபி, இரண்டு சாம்பியன்ஸ் லீக்கை வென்ற அணியில் இடம் பிடித்தவர்
    • 2010-ல் இருந்து தனது அதிரடி ஆட்டம் மூலம் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிரன் பொல்லார்டு. இவர் மிதவேகப்பந்து வீச்சாளரும் கூட. இவர் கடந்த 2010-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்தார். தொடர்ந்து அந்த அணிக்காக விளையாடி வந்தார்.

    இந்த ஆண்டுடன் சுமார் 13 ஆண்டுகள் தொடர்ந்து இடம் பிடித்தார். அடுத்த ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலம் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இன்று மாலை 5 மணிக்கும் வீரர்களை வெளியேற்றி, தக்க வைத்துள்ள வீரர்கள் விவரங்களை 10 அணிகளும் சமர்பிக்க வேண்டும்.

    அந்த வகையில், பொல்லார்டை ரிலீஸ் செய்வதாக மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்தது. இதனால் அவர் மாற்று அணிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது.

    இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்டு அறிவித்தார். அவர் அறிவித்த மறுநொடியே, அவரை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அறிவித்தது. இதனால் வீரராக இல்லாமல், பயிற்சியாளராக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடர்ந்து கைக்கோர்க்கிறார் பொல்லார்டு.

    இதுகுறித்து பொல்லார்டு கூறுகையில் ''நான் இன்னும் சில வருடங்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் நோக்கம் இருந்த நிலையில், இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நடத்திய ஆலோசனையின்போது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுதல் தேவைப்படுகிறது. ஆகையால் நான் தொடர்ந்து நீடிக்க முடியாது என்பது தெரிவந்தது. அப்புறம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக என்னாலேயே எதிரணியில் விளையாடுவதை பார்க்க முடியாது. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

    மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து உணர்வுபூர்வமாக குட்-பை சொல்லி விடைபெறவில்லை. ஐ.பி.எல். தொடரில் பேட்டிங் பயிற்சியாளராகவும், மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியின் வீரராகவும் பணியாற்ற ஒப்புக் கொண்டேன்'' என்றார்.

    ×