என் மலர்
முகப்பு » slug 283863
நீங்கள் தேடியது "ஆற்றில் மூழ்கி மாணவி பலி"
- எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
- கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகேயுள்ள ஆட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் மோனிகாஸ்ரீ (வயது 16). அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்தார்.
நேற்று அதே பகுதியில் உள்ள ஆற்றங்கரைக்கு மோனிகாஸ்ரீ துணி துவைக்க சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல இண்டமங்கலம்பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி மாது (47) துணி காய போடும் போது மின்கம்பியில் கைப்பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
×
X