search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தியமூர்த்தி பவன்"

    • அண்ணாமலை தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும்.
    • தமிழக அரசியலில் தோற்றுப்போனவர்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி பா.ஜ.க. அதன் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து வெறுப்பு அரசியலை செய்து வருகிறார்.

    முதல்-அமைச்சர் மீதும் அவதூறு பேசுவது வாடிக்கையாகி விட்டது. எத்தனையோ அரசியல் கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள. இவரைப்போல் யாரிடமும் வெறுப்பும், திமிறும், ஆணவமும் இல்லை.

    காங்கிரஸ் பற்றி எனக்கு தெரியாது என்கிறார். நான் படித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன். முதலில் ஜன நாயகத்தை படிக்க வேண்டும். நான் காங்கிரஸ் பற்றி பேச தயார். நீங்கள் ஜனசங்கம், இந்து மகாசபா பற்றி பேச தயாரா?

    தன் கட்சி வேட்பாளரையே தோற்கடிக்க முயற்சித்த விவகாரம், சிருங்கேரி மடம் முதல் பல விசயங்களை நாங்களும் தூசு தட்டுவோம்.

    முதல்-அமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை கிண்டல் செய்கிறார். மோடி எத்தனையோ வெளிநாடுகளுக்கு செல்கிறாரே முதலீடுகளை கொண்டு வந்தாரா?

    முதலில் அண்ணாமலை தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். அவர் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து காவிரி விவகாரத்தில் கன்னடர்களுக்குத்தான் ஆதரவாக இருப்பாராம்.

    தமிழக அரசியலில் தோற்றுப்போனவர். இப்போது உலக அரசியல் செய்யப் போகிறாராம். ஒரு வேளை அமெரிக்க அதிபராக முயற்சிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கே.எஸ்.அழகிரியை முற்றுகையிட்ட நிர்வாகிகள் சிலர் வாக்குவாதம்.
    • காங்கிரஸ் தலைமை அலுவலத்தில் கலவரம் போன்ற சூழல் உருவானது.

    சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று கோஷ்டி மோதல் ஏற்பட்டது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் 300 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியை, கட்சி நிர்வாகிகள் சிலர் முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த இரண்டு பேர் கன்னத்தில் அடித்த அழகிரி வெளியேறுமாறு கூறினார். இந்த முற்றுகையின் போது இருதரப்பு நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. 


    இதையடுத்து ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர். காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே சாலையிலும் இந்த மோதல் தொடர்ந்தது. இதில் ஒருவருக்கு தலையிலும், ஒருவருக்கு முகத்திலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இந்த மோதலால் அங்கு கலவரம் போன்ற சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனுக்கு போலீசார் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 

    ×