என் மலர்
நீங்கள் தேடியது "வலம்புரி சங்கு பூஜை"
- கோவில் உள்பிரகாரத் பூக்களால் புஸ்பாஞ்சலி பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசியில் வாசி அவினாசி என்ற சிறப்புவாய்ந்த பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் தர்மசாஸ்தா காசி யாத்திரை குழு சார்பாக அவினாசிலிங்கேசுவரர் கோவில் சிவாச்சாரியார் ஆரூர் சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கங்கை நீர் எடுத்து வந்து 108 வலம்புரி சங்குபூஜை நடந்தது.
முன்னதாக கோவில் உள்பிரகார கொடிகம்பம் முதல் சுவாமி சன்னதி வரை செவ்வந்தி கம்பங்கி, மருகு, மரிக்கொழுந்து, தாமரை மல்லி, முல்லை உள்ளிட்ட பல்வேறு பூக்களால் புஸ்பாஞ்சலி பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு ஆராதனை, வழிபாடுகள் நடந்தது. இதில் அவினாசி திருப்பூர், பூண்டி, சேவூர்,உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.