என் மலர்
நீங்கள் தேடியது "அன்பகம் திருப்பதி"
- அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது பெயரை எடுத்துள்ளனர்.
- மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் வார்டுகளுக்கு செலவு செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.
திருப்பூர் :
அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும் 42 வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி பேசியதாவது :- திருப்பூர் ஈஸ்வரன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட நிழற்குடைக்கு அ.தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ., சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது பெயரை எடுத்துள்ளனர். ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்குவதை போல் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் வார்டுகளுக்கு செலவு செய்ய நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மாநகராட்சியை முன்மாதிரியாக கொண்டு திருப்பூர் மாநகராட்சியிலும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் உள்ளகோவில், பள்ளி, மருத்துவமனை பகுதிகளில் உள்ள மதுபானக்கூடங்களை அகற்ற மாநகராட்சி முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜ் :- குமார் நகர் தொடங்கி காவிரி பாளையம் புதூர் வரை அரசு பேருந்து போதிய அளவில் இல்லை. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் ,வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என பலரும் அன்றாடம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மாநகராட்சி போதிய பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
மாநகராட்சி பகுதியில் குடிநீர் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கிறது. வரி வசூல் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே சீரான முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற பணிகள் பல்வேறு இடங்களில் தரமற்ற முறையில் உள்ளது. அதனை கண்காணித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.