என் மலர்
நீங்கள் தேடியது "காய்கறி வியாபாரி கொலை"
- அற்புதராஜூடன் 2 பேர் பொன்ராஜின் வீட்டுக்குள் சென்று விட்டு முகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் வரும் காட்சி அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.
- கேமரா காட்சிகளை வைத்து அற்புதராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை:
சென்னை அபிராமபுரத்தில் வசித்து வந்த காய்கறி வியாபாரி பொன்ராஜ். கடந்த 13-ந்தேதி வீடு புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடியை சேர்ந்த இவருக்கும், இவரது தம்பி குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இருந்து வந்த முன் பகையால் சென்னையில் வசித்து வந்த தம்பி மகனான அற்புதராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பொன்ராஜை வீடு புகுந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அபிராமபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது அற்புதராஜூடன் 2 பேர் பொன்ராஜின் வீட்டுக்குள் சென்று விட்டு முகத்தை மறைத்துக் கொண்டு வெளியில் வரும் காட்சி அப்பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகி இருந்தது.
இதை வைத்து அற்புதராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அற்புதராஜூடன் சென்று பொன்ராஜை கொலை செய்தவர்கள் யார்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி வாண்டுமணி மற்றும் கூட்டாளியான சுப்ரமணி என்பது தெரியவந்தது.
இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வாண்டு மணி, சுப்ரமணி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அற்புதராஜின் மைத்துனர் நடத்தி வரும் 'பாஸ்ட் புட்' உணவகத்துக்கு ரவுடி வாண்டு மணி சாப்பிட செல்வது வழக்கம். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில்தான் அற்புதராஜ், வாண்டு மணியையும் அவரது கூட்டாளி சுப்ரமணியையும் துணைக்கு அழைத்து சென்று பொன்ராஜை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.