என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏறுமுகம்"
- உக்ரைன்-ரஷியா இடையேயான போர், உலக அளவில் பொருளாதார மந்தநிலை போன்றவை காரணமாக ஜவுளித்தொழில் பெரும் பின்னடைவை சந்தித்தது.
- கடந்த ஆண்டு என்பது கொரோனா காலத்தில் தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் இருந்த காலகட்டமாகும்.
திருப்பூர்:
பின்னலாடை வர்த்தகத்தின் மூலமாக இந்தியாவுக்கு அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டிக்கொடுக்கும் ஊராக திருப்பூர் விளங்கி வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் பனியன் தொழில் கடந்த கால சூழ்நிலைகள் காரணமாக முடக்க நிலையை சந்தித்துள்ளது. நூல் விலை அபரிமிதமான உயர்வு, உக்ரைன்-ரஷியா இடையேயான போர், உலக அளவில் பொருளாதார மந்தநிலை போன்றவை காரணமாக ஜவுளித்தொழில் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதன்காரணமாக திருப்பூர் பின்னலாடை வர்த்தகமும் முடக்கியுள்ளது.
இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த செப்டம்பர் மாதம் 18 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. அதன்தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதத்துக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் என்பது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 21 சதவீதம் வீழ்ச்சியடைந்து இருக்கிறது. அதாவது தொடர்ச்சியாக ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் சரிவை சந்தித்துள்ளது.
ஆயத்த ஆடைகள் மற்றும் ஓவன் ஆடைகள் தயாரிப்பில் இந்திய அளவில் திருப்பூரின் பங்களிப்பு மட்டும் 55 சதவீதமாக இருக்கிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி என்பது திருப்பூரில் ஆயத்த ஆடை தொழில் வீழ்ச்சியையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. திருப்பூரில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ரூ.20 ஆயிரத்து 250 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.18 ஆயிரத்து 80 கோடியாகும். டாலர் மதிப்பில் 2 ஆயிரத்து 572 பில்லியனாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 2 ஆயிரத்து 426 பில்லியன் டாலராக இருந்துள்ளது. கடந்த ஆண்டு என்பது கொரோனா காலத்தில் தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் இருந்த காலகட்டமாகும்.
அதன்பிறகு கொரோனா ஊரடங்கு முடிந்து தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கிய பின்னரும் நடப்பு ஆண்டில் பெரிய அளவில் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கவில்லை என்பதை காட்டுகிறது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-
நூல் விலை உயர்வு, உக்ரைன்-ரஷியா போர், உலக அளவில் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாத ஏற்றுமதி என்பது அதற்கு முன்பு 4 மாத ஆர்டர்களை பொறுத்தது. நவம்பர், டிசம்பர் மாதம் வரை ஏற்றுமதி வர்த்தகம் என்பது குறைவாகவே இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆடைகள் தயாரிக்க வர்த்தக விசாரணை நடந்து வருகிறது. இந்த வர்த்தக விசாரணை ஆர்டராக மாறி ஆடைகளை தயாரித்து அனுப்பும்போது ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கு பிறகு ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்க தொடங்கும். ஏ.இ.பி.சி., பியோ, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து புதிய ஆர்டர்களை ஈர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பின்னலாடை தொழிலை பாதுகாக்க வசதியாக 'பேக்கிங் கிரெட்டிட்' மீதான வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 4 மாதங்களாகவே திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் முழு வீச்சில் நடைபெறவில்லை. இருக்கின்ற ஆர்டர்களை மட்டுமே செய்து கொடுத்து வந்தனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகு புதிய ஆர்டர்கள் வரும் என்று எதிர்பார்ப்பில் இருந்தனர். தற்போது வெளிநாடுகளில் இருந்து வர்த்தக விசாரணை மட்டுமே நடந்து வருகிறது. அவை ஆர்டர்களாக மாறும் என்று ஏற்றுமதியாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஏஐடியூசி. திருப்பூா் மாவட்ட 5 வது மாநாடு ஊத்துக்குளி சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம் வருமாறு:-
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் திருப்பூா் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, நூல் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தத் தொழில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதுடன், பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. ஆகவே, ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு சுமைப்பணித் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.21 ஆயிரமாக நிா்ணயிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவுசெய்துள்ள அனைத்து தொழிலாளா்களுக்கும் பணப்பயன்களை உயா்த்தி வழங்குவதுடன், ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடப்பு பருத்தி ஆண்டில்(2022 அக்டோபர்-2023 செப்டம்பர்), மொத்த பஞ்சு வரத்து 397 லட்சம் பேல்(ஒரு பேல்-170 கிலோ) அளவு இருக்கும். 359 லட்சம் பேல் அளவு தேவைகள் உள்ளன. 38 லட்சம் பேல் அளவு கூடுதல் கையிருப்பாக இருக்கும் என்று மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.
கடந்த சீசனில் வரலாறு காணாத அளவு ஒரு கேண்டி(356 கிலோ) 65 ஆயிரத்தில் இருந்து, 1.05 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது. வழக்கமாக சர்வதேச விலையை காட்டிலும் இந்திய பருத்தி விலை குறைவாக இருக்கும்.
கடந்த ஆண்டு சர்வதேச விலையை காட்டிலும் இந்திய பருத்தி விலை உயர்ந்ததால், ஜவுளி ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டது.ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக, பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை இறக்குமதி செய்யும் நாடுகளில் பொருளாதார மந்தநிலை முழுவதுமாக சீராகவில்லை. இது குறித்து இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:-
நடப்பு பருத்தி ஆண்டில் தரமான பருத்தி அதிக அளவு கிடைக்கும் என்பதால் விலையும் கட்டுக்குள் வந்தது. கடந்த சில மாதங்களாக ஸ்தம்பித்திருந்த ஜவுளித்தொழில், டிசம்பர் மாதம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
கடந்த 10 நாட்களில் பஞ்சு விலை 5,500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. நூற்பாலைகள் பல்வேறு காரணங்களால், 60 சதவீதம் மட்டுமே உற்பத்தியை தொடர்கின்றன. இந்நிலையில் 65 ஆயிரம் ரூபாயாக இருந்த பஞ்சு விலை, 70 ஆயிரத்தை கடந்துள்ளதால் நூற்பாலைகள் திகைத்துப்போயுள்ளன.
பருத்தி சீசன் துவங்கிய ஒரே மாதத்தில் விலை உயர்வது ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் சவாலாக மாறிவிடும். இருப்பினும் இம்மாத இறுதியில் பருத்தி மார்க்கெட் நிலவரம் முழுமையாக தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்