search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஷ்மண்"

    • டிராவிட்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், லஷ்மண் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • பவர் பிளேயில் அதிரடியாக விளையாடும் போக்கு இந்திய அணியிடம் இல்லை என விமர்சனம் வைக்கப்பட்டது.

    டி20 உலகக் கோப்பை முடிந்த கையோடு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20, மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது.

    நாளை டி20 கிரிக்கெட் தொடங்குகிறது. முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இளம் வீரர்கள் பலர் களம் காண்க இருக்கிறார்கள்.

    டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்விக்கு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாததுதான். அதுவும் குறிப்பாக பவர் பிளேயில் அதிரடியாக விளையாடும் போக்கு இந்திய அணியிடம் இல்லை என விமர்சனம் வைக்கப்பட்டது.

    இதனால் நியூசிலாந்து தொடரில் இருந்து இந்திய அணி தனது அணுகுமுறையை மாற்றலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இந்த நிலையில் பயிற்சியாளரான லஷ்மண் பயமின்றி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என இளம் வீரர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.

    இது குறித்து லஷ்மண் கூறுகையில் டி20 கிரிக்கெட்டில் நாம் சுதந்திரமாக, பயமின்றி விளையாடுவது அவசியம். இந்த எண்ணத்துடன் களத்தில் சென்று விளையாடக் கூடிய வீரர்கள் எங்களிடம் உள்ளனர். இந்த தகவல் கேப்டன் மற்றும் நிர்வாகம் மூலம் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவேளையில், சீதோஷண நிலை, அப்போதைய போட்டியின் சூழ்நிலை ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டு யுக்திகளை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகமான பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்றால், டாப் ஆர்டர் வீரர்களில் சுதந்திரமாக நெருக்கடி இன்று தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இதுதான் டி20 விளையாட்டிற்கு தேவை. ஏராளமான அணிகள் இந்த முறையை கொண்டு வர முயற்சிக்கும் வகையில் அப்படிபட்ட வீரர்களை அடையாளம் காணும் தேர்வு நடவடிக்கையை மேற்கொள்ளும்.

    ஹர்திக் பாண்ட்யா அற்புதமான கேப்டன். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அயர்லாந்தில் இருந்து அவரிடம் குறிப்பிட்ட நேரத்தை செலவழித்துள்ளேன். அவரது இருப்பும் பணி நெறியும் முன்னுதாரணமானது. அவர் ஒரு வீரர்களின் கேப்டன் மற்றும் அணுகக்கூடியவர். வீரர்கள் அவரை நம்புகிறார்கள். அவர் முன்மாதிரியாக வழி நடத்துகிறார் என்றார்.

    ×