என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான கடைகளை மூடக்கோரி ஆர்ப்பாட்டம்"

    • பெரியகுளம் தென்கரை காந்திசிலை பஸ்நிறுத்தம் அருகே வணிகவளாகங்கள் நிறைந்த பொதுமக்கள் கூடும் இடத்தில் தனியார் மதுபானக்கடை உள்ளது
    • மதுபான கடைகளை மூடாவிட்டால் பொது மக்களை திரட்டி அடுத்த கட்ட போராட்டம் நடத்த ப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் தென்கரை காந்திசிலை பஸ்நிறுத்தம் அருகே வணிகவளாகங்கள் நிறைந்த பொதுமக்கள் கூடும் இடத்தில் தனியார் மதுபானக்கடை உள்ளது. மேலும் தேனி சாலையிலும் வைகை அணை சாலையிலும் 2 தனியார் மனுபான கடைகள் இயங்கி வருகிறது.

    இதனால் பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளதாக கூறி தனியார் மதுபான கடைகளை அகற்றவேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் இளங்கோவன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுபான கடைகளை மூடாவிட்டால் பொது மக்களை திரட்டி அடுத்த கட்ட போராட்டம் நடத்த ப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ×