search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் பயன்பாடு"

    • ஆலங்காட்டுப்பாளையத்தில் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்பப் பள்ளியில் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.
    • ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணண், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு சிறப்புச் செயலாளரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான எம்.கருணாகரன் ஆய்வு மேற்கொண்டாா்.

    இதில், தெக்கலூா் அங்கன்வாடி மையம், கிட்டாம்பாளையம் ஊராட்சி பெரியாா் சமத்துவபுரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மருத்துவ முகாம், நம்பியாம்பாளையம் மற்றும் ஆலங்காட்டுப்பாளையத்தில் ரூ.4.57 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்பப் பள்ளியில் கழிப்பறை கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

    அதேபோல, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதுப்பாளையத்தில் நஞ்சண்ணன்குட்டை பகுதியில் குளத்தை தூா்வாரும் பணி, நம்பியாம்பாளையம் ஊராட்சியில் ஆரம்ப சுகராதார நிலையத்தில் உள்ள மருந்தகம், புறநோயாளிகள் பிரிவு மற்றும் மருந்து இருப்பு ஆகியவை குறித்த விவரங்களையும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

    இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாநகராட்சி நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுமானப் பணி, ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுமானப் பணி, ஈஸ்வரமூா்த்தி பூங்காவில் கழிவறை கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.

    பின்னா் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

    ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணண், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

    ×