search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா விமான நிலையம்"

    • சமூக வலைத்தள பிரபலமான இவரை 9 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
    • வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கலவையான கருத்துகளுடன் வேகமாக பரவுகிறது.

    சாகேலி ருத்ரா என்பவர் 'ரீல்ஸ்' வீடியோ உருவாக்கி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார். சமூக வலைத்தள பிரபலமான இவரை 9 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

    இந்தநிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு வளாகத்தில் சாகேலி ருத்ரா ஆட்டம் போட்டு புதிய வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

    ஷாருக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்து பிரபலமான திரைப்படத்தின் இந்தி பாடலை பின்னணியில் ஒலிக்க செய்து வளைந்து நெளிந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கலவையான கருத்துகளுடன் வேகமாக பரவுகிறது.


    • நாளை காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்.
    • கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ரீமால் புயல், வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன் பின்னர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்.

    இந்த தீவிர புயல் வங்காளதேசம் மற்றும் சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ரீமால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நண்பகல் முதல் 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மதியம் 12 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை 21 மணி நேரம் விமானச் சேவை நிறுத்தப்படுகிறது.

    கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    • கொல்கத்தாவில் ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ஒரே ரன்வேயில் உரசிக் கொண்டன.
    • இந்தச் சம்பவத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பீகாரின் தர்பங்கா நோக்கி இண்டிகோ விமானம் நேற்று புறப்பட்டது. அதேபோல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டது. பயணிகளுடன் சென்ற இரு விமானங்களும் ஒரே ரன்வேயில் சென்றதாகக் கூறப்படுகிறது.

    அப்போது இரு விமானங்களின் இறக்கைகளும் உரசியதாகவும், விமானிகள் சாதுரியமாக செயல்பட்டதால் விமானம் திசை திருப்பப்பட்டு விபத்து தவிர்க்கப்பட்டதும் தெரிய வந்தது. இச்சம்பவத்தின்போது விமானங்களில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

    இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்ததால் பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு, மாற்று விமானங்களால் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கொல்கத்தா விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ நிறுவனங்களின் ஊழியர்களிடமும் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.

    • நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
    • விரைந்து வந்த 8 தீயணைப்பு வண்டிகள் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்தன.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3சி புறப்பாடு முனைய கட்டிடத்தின் செக்-இன் கவுண்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வண்டிகள் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்தன. தீ விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

    சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகளில் செக்-இன் பகுதியில் கடுமையான தீ விபத்தின் ஒரு பகுதியைக் காட்டின. விமான நிலைய அதிகாரிகள் முனையத்தில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

    இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா கூறுகையில், டி போர்டல் செக்-இன் கவுண்டரில் தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டத்தால், பயணிகள் மற்றும் ஊழியர்கள் முனைய கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டுள்ளது. இயல்பான செயல்பாடு திரும்பி உள்ளது என தெரிவித்துள்ளார்.

    மேலும், செக்-இன் மற்றும் விமானங்கள் செயல்பாடு இரவு 10.15 மணிக்கு மீண்டும் தொடங்கும் என கொல்கத்தா விமான நிலையம் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தது.

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் உடனடியாக கொல்கத்தா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
    • தொழில்நுட்ப வல்லுனர்கள் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு இன்று காலை 10.05 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 156 பேர் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இது பற்றி விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து அந்த விமானம் உடனடியாக கொல்கத்தா விமான நிலையத்தில் மீண்டும் அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    விமான நிலையத்துக்கு உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    ×