என் மலர்
நீங்கள் தேடியது "விருசுழி ஆறு"
- தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் மற்றும் கடைசி நாளில் 7 சுவாமிகள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
- ஆற்றின்கரையில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை-தீர்த்தவாரி நடைபெற்றது.
தேவகோட்டை
தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் மற்றும் கடைசி நாளில் 7 சுவாமிகள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் ரங்கநாத பெருமாள், மீனாட்சி சுந்தரேசர், சிதம்பர விநாயகர், கைலாசநாதர், கோதண்ட ராமர், கிருஷ்ணர், கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் ஆகிய சுவாமிகள் மேள தாளத்துடன் ஒவ்வொரு சாமிகளும் அலங்காரம் செய்து நகரில் முக்கிய வீதிகளின் வலம் வந்து தேவகோட்டை விருசுழி ஆற்றின் ஒத்தக்கடை அருகே ஒன்று சேர்ந்தது.
ஆற்றின்கரையில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை-தீர்த்தவாரி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அனைத்து சுவாமிகளும் பிரியாவிடை பெற்று முக்கிய வீதி வழியாக அந்தந்த கோவில்களுக்கு சென்றன. இவ்விழாவில் தேவகோட்டை காரை சேர்க்கை கோட்டூர் நைனார்வயல், அடசிவயல், பூங்குடி, திருமணவயல் பாவனக்கோட்டை பூங்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பாதயாத்திரையாக வந்து தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர்.