search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்சல் படேல்"

    • ஹர்சல் படேலின் அந்த தைரியத்தை கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
    • இது போல மேலும் பல பவுலர்கள் செய்ய வேண்டுமென விரும்புகிறேன்.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் சீசனின் 15-வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் விளையாடின. இந்த போட்டியின் கடைசி பந்தில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ரவி பிஷ்னோயை 'மன்கட்' முறையில் ஹர்ஷல் படேல் அவுட் செய்ய முயற்சி செய்திருப்பார். அவரது அந்த தைரியம் தனக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    ஆட்டத்தின் இக்கட்டான கட்டத்தில் ஹர்ஷல் படேல் இதை செய்திருப்பார்.

    இது குறித்து அஸ்வின் கூறியதாவது:-

    வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவை. ஒரு பந்து தான் எஞ்சி உள்ளது. நான்-ஸ்ட்ரைக்கர் எப்படியும் ரன் எடுக்கவே முயற்சிப்பார். அந்த சூழலில் எப்போதுமே நான் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யவே முயற்சிப்பேன். அதன் விளைவுகள் என்ன என்பது குறித்தெல்லாம் யோசிக்க மாட்டேன்.

    நான் அந்தப் போட்டியை பார்த்த போது. அவர் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ய வேண்டும் என என் மனைவியிடம் சொன்னேன். பவுலரும் அதை செய்தார். அவரது அந்த தைரியத்தை கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். இது போல மேலும் பல பவுலர்கள் செய்ய வேண்டுமென விரும்புகிறேன். இது விதிகளுக்கு உட்பட்ட ஒன்றுதான்.

    இவ்வாறு அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக அஸ்வின் விளையாடிய போது இதே முறையில் ராஜஸ்தான் வீரர் பட்லரை அவுட் செய்திருந்தார். அது அப்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • தொடரின் தொடக்கத்திலேயே கேப்டனும், பயிற்சியாளரும்,அவர்களிடம் தெளிவுபடுத்தி விட்டார்கள்.
    • உலகக்கோப்பை தொடர் முழுவதும் யஷ்வேந்திர சஹால் ஒரு போட்டியில் கூட வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.

    இந்திய அணி உலகக்கோப்பையில் அரையிறுதியோடு வெளியேறியது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதையடுத்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்திய அணி விரைவில் தலைமை மாற்றத்துக்கு ஆளாகலாம் என சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் யஷ்வேந்திர சாஹல் ஒரே ஒரு போட்டியில் கூட பயன்படுத்தவில்லை. இதுகுறித்து இப்போது தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார். அதில் சஹாலோ அல்லது ஹர்ஷல் படேலோ தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அதிருப்தி அடையவில்லை. ஏனென்றால் தொடரின் தொடக்கத்திலேயே கேப்டனும், பயிற்சியாளரும்,அவர்களிடம் தெளிவுபடுத்தி விட்டார்கள். தேவைப்பட்டால் மட்டுமே உங்களை அணியில் எடுப்போம். இல்லை என்றால் கடினம்தான் என்று தெளிவுபடுத்திவிட்டார்கள். அதனால் அவர்கள் இருவரும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால், எப்படி தங்களது சிறப்பானதைக் கொடுக்க முடியும் என்று காத்திருந்தனர் என்று கூறியுள்ளார்.

    ×