என் மலர்
நீங்கள் தேடியது "குரூப்-1 தேர்வு"
- 92 பதவிகளுக்கு குரூப்-1 தேர்வு இன்று நடந்தது.
- 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை கலெக்டர், டி.எஸ்.பி உள்ளிட்ட 92 பதவிகளுக்கு குரூப்-1 தேர்வு இன்று நடந்தது. இந்த பதவிகளுக்கு 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் வளவனூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நி லைப்பள்ளி, ரங்கநாதன் சாலையில் உள்ள வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி மேலும் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, இ.எஸ். கலை-அறிவியல் கல்லூரி கல்லூரி உள்ளிட்ட 23 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.
இந்த குரூப்-1 தேர்வை விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 10,926 பேர் எழுதுகின்றனர். மேலும் விழுப்புரம் சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் நடைபெறும் தேர்வு மையங்களிலும் தண்ணீர் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடந்தது.
தேர்வு நடக்கும் முன்னதாகவே விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் வருவாய் அலுவலர் பரமேஸ்வரி விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தெய்வானை அம்மாள் கல்லூரிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்விற்கான வினா த்தாள்களை கொண்டு செல்ல 6 நடமாடும் குழுக்களும் தேர்வை கண்காணிக்க 2 பறக்கும் படை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்வு நடைபெறும் மையங்களில் முறை கேடுகளை தவிர்ப்பதற்காக போலீஸார்கள் ஆய்வு பணிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறாமல் அதை தவிர்க்க வீடியோ கிராபர்களும் நியமனம் செய்ய ப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி அறிவுறுத்தினார்.