என் மலர்
நீங்கள் தேடியது "பணி புறக்கணிப்பு"
- மண்ணிற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய ராயல்டி தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.
- ஓய்வூதிய பலன்களை வழங்க அரசு தனியாக நிதி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் ராஜகோ பால்ராஜா தலைமை தாங்கினார். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன், பொருளாளர் மயில்வாகனன், துணை தலைவர்கள் சுப்புராஜ், உலகநாதன், சந்தனசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், நீர் நிலைகளிலிருந்து எடுத்த மண்ணிற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய ராயல்டி தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 6 மாத ஊதியம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க அரசு தனியாக நிதி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊழியர்களின் ஊதிய த்திற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை காலதாமதமின்றி உடனே வழங்கவேண்டும்.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசு துறைகளில் வழங்கப்படுவது போல் உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க ஏதுவாக ஒரு கமிட்டி அமைக்கப்படும் என, முதலமைச்சர் ரங்கசாமியின் சட்டமன்ற வாக்கு றுதிபடி, உடனே கமிட்டி அமைக்கவேண்டும். பொதுவான பணிநிலை அரசா ணைப்படி உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் ஒருமுறை நிகழ்வாக பதிவு உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. முடிவில் பொருளாளர் சாமிநாதன் நன்றி கூறினார்.