என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இந்திய மாலுமிகள்"
- ஒரு இந்திய மாலுமி மட்டும் விடுவிக்கப்பட்டு அவர் நாடு திரும்பினார்.
- மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும்.
தெக்ரான்:
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும் கடந்த மாதம் 13-ந்தேதி ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியையொட்டிய பகுதியில் இஸ்ரேல் தொடர்புடைய எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது.
அந்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் இருந்தனர். இந்திய மாலுமிகளை மீட்க ஈரானுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இதற்கிடையே ஒரு இந்திய மாலுமி மட்டும் விடுவிக்கப்பட்டு அவர் நாடு திரும்பினார்.
இந்த நிலையில் சுமார் 20 நாட்களுக்கு பிறகு 16 இந்திய மாலுமிகள் உள்பட கப்பலில் இருந்த 24 பேரையும் ஈரான் விடுவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி ஹூசைன் அமிராபக்துல்லா ஹியன் கூறுகையில், "இஸ்ரேலுக்குத் தொடர்புடையதாக கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்குக் கப்பலில் பணிபுரிந்த அனைத்து மாலுமிகளும் விடுவிக்கப்பட்டனர்.
மாலுமிகளின் விடுதலையானது ஈரானின் மனிதாபிமான நடவடிக்கையாகும். கப்பலின் கேப்டன் தலைமையில் மாலுமிகள் அனைவரும் அவரவர் சொந்த நாட்டுக்குத் திரும்பலாம். ஆனால் கப்பல் மட்டும் ஈரான் காவலிலேயே இருக்கும்" என்றார்.
- கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்திய மாலுமிகள் உள்பட 21 ஊழியர்கள் இருந்தனர்.
- கடற்கொள்ளையர்கள் இல்லாதது உறுதி செய்யப்பட்டது.
புதுடெல்லி:
அரபிக் கடலில் சோமாலியா கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டு சரக்கு கப்பலை (எம்.வி.லிலா நார்போக்) கடற்கொள்ளையர்கள் கடத்தினர். 5 முதல் 6 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் கப்பலில் ஏறினர்.
இந்த தகவலை கப்பலில் இருந்த ஊழியர்கள், இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பின் இணைய தளத்தில் வெளியிட்டனர். கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்திய மாலுமிகள் உள்பட 21 ஊழியர்கள் இருந்தனர்.
அந்த கப்பலை மீட்கும் நடவடிக்கையில் இந்திய கடற்படை உடனடியாக களம் இறங்கியது. ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பல், கடத்தப்பட்ட கப்பலை மீட்கும் பணிக்கு திருப்பி விடப்பட்டது. மேலும் கடற்படை ரோந்து விமானம், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் அனுப்பப்பட்டன.
கடற்படை கமாண்டோக்களும் கப்பலை மீட்க அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் கடற்படை கமாண்டோ வீரர்கள் அதிரடியாக சரக்கு கப்பலுக்குள் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
#WATCH | First visuals of the rescued Indians, who were a part of the crew, onboard the hijacked vessel MV Lili Norfolk. The jubilant members of the crew chant "Bharat Mata ki Jai" and thank the Indian Navy.
— ANI (@ANI) January 6, 2024
All 21 crew, including 15 Indians, were safely evacuated by the Indian… pic.twitter.com/uoL96VIrEw
கப்பலில் இருந்த 21 ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். அதன்பின் கப்பல் முழுவதும் சோதனை செய்த போது அங்கு கடற்கொள்ளையர்கள் இல்லை. அவர்கள் தப்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் கடத்தப்பட்ட கப்பல் மீட்கப்பட்ட வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது. அதில் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை இந்திய போர்க் கப்பல், ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் சுற்றி வளைத்து கண்காணித்தது.
அங்கு ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் கடற்படை கமாண்டோ வீரர்கள், படகில், சரக்கு கப்பல் அருகே சென்றனர். அங்கிருந்து கப்பலுக்குள் ஏறி சோதனையில் ஈடுபட்டு கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கடற்கொள்ளையர்கள் இல்லாதது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவின் கடும் எச்சரிக்கையால் கப்பலை கடத்தும் முயற்சியை கடற்கொள்ளையர்கள் கை விட்டிருக்கலாம் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலின் உரிமையாளரான லீலா குளோபலின், தலைமை நிர்வாகி ஸ்டீவ் குன்சர், இந்திய கடற்படைக்கு நன்றி தெரிவித்தார்.
- லிபியா கிளர்ச்சி குழுவால் சிறைபிடிக்கப்பட்ட 9 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர்.
- மீட்கப்பட்ட 9 பேரும் விசா நடைமுறைகள் முடியும் வரை திரிபோலியில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிபோலி:
கிரீஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான எம்.டி.மாயா-1 என்ற வணிக கப்பல் ஒன்று பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக்கொண்டு மால்டாவில் இருந்து லிபியா நாட்டு தலைநகர் திரிபோலிக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்றது. கப்பலில் இந்தியாவை சேர்ந்த 9 மாலுமிகள் உள்பட பலர் இருந்தனர்.
அந்த கப்பல், லிபியாவின் கடற்கரைக்கு அருகே வந்த போது நடுக்கடலில் பழுதடைந்தது. அப்போது கப்பலில் இருந்தவர்களை லிபியா உள்ளூர் போராளிகள் சிறைபிடித்தனர்.
இந்திய மாலுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டது. வெளிவிவகார அமைச்சகமும், இந்திய தூதரகமும் லிபியாவில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்திய மாலுமிகளை மீட்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் லிபியா கிளர்ச்சி குழுவால் சிறைபிடிக்கப்பட்ட 9 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் லிபியா தலைநகர் திரிபோலிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களை துணிசியாவுக்கான இந்திய தூதர் வரவேற்றார்.
மீட்கப்பட்ட 9 பேரும் விசா நடைமுறைகள் முடியும் வரை திரிபோலியில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாலுமிகளில் 5 பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் ராஜஸ்தான், மேற்கு வங்காளம், இமாச்சல பிரதேசம், குஜராத்தை சேர்ந்த தலா ஒருவர் ஆவர்.
- இந்திய மாலுமிகள் உள்ள நார்வே கப்பல் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
- கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியா கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 6-ம் தேதி இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்குச் சென்றது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் இருந்தனர்.
நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக ஏற்கனவே பல கப்பல்கள் காத்திருந்தன. அவற்றுடன் இந்திய மாலுமிகள் இருந்த கப்பலும் எண்ணெய் ஏற்ற காத்திருந்தது. அப்போது கடல் கொள்ளையர்களின் கப்பல் அந்த வழியாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்திய மாலுமிகள் கப்பலை பாதுகாப்பான பகுதி நோக்கி செலுத்தினர்.
அப்போது அங்கு வந்த கினியா கடற்படை கப்பல் இந்திய மாலுமிகள் இருந்த கப்பலை தடுத்து நிறுத்தியது. பின் அதிலிருந்த இந்திய மாலுமிகள் உள்பட 26 பேரையும் சிறைபிடித்தனர். இதில் கேரளாவை சேர்ந்த 3 மாலுமிகளும் உள்ளனர். நார்வே கப்பல் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, இந்திய மாலுமிகள் சிறை பிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் கினியா நாட்டுடன் பேசி இந்திய மாலுமிகளை மீட்கும் நவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 3 மாதமாக அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள மாலுமிகள் தற்போது அண்டை நாடான நைஜீரியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாலுமிகளை மீட்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய மாலுமிகள் விவகாரத்தில் உதவிட தயார் என நைஜீரியா அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்ற அந்நாட்டு உள்துறை மந்திரி ஆக்பெனி ரவுப் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாலுமிகள் விடுதலை விவகாரத்தில் இந்திய அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்த பிரச்சினையைத் தீர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என அனைத்து இந்தியர்களுக்கும் உறுதியளிக்கிறோம் என தெரிவித்தார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்