search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபஸ்ஸும்"

    • பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தபஸ்ஸும்.
    • 78 வயதாகும் நடிகை தபஸ்ஸும் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

    1947ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமான நடிகை தபஸ்ஸும், 1990வரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மும்பையைச் சேர்ந்த இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு கவனம் ஈர்த்தார்.

     

    தபஸ்ஸும்

    தபஸ்ஸும்

    இந்நிலையில் 78 வயதாகும் மூத்த நடிகை தபஸ்ஸும் நேற்று மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை தபஸ்ஸம்மின் இரங்கல் கூட்டம் வருகிற நவம்பர் 21ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் மும்பையின் சான்டாக்ரூஸ் பகுதியில் நடைபெறவுள்ளதாக அவரது தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவர் தொலைக்காட்சியில் இந்தியாவின் முதல் டாக் ஷோவை தொகுத்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×