search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரள ரசிகர்கள்"

    • இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே கேரளவைச் சேர்ந்த ரசிகர்கள் குழு மெஸ்சி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அரபிக்கடலில் மூழ்கி மெஸ்சியின் பெரிய கட்அவுட்டை நீருக்கடியில் வைத்தனர்.
    • அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் லியோனல் மெஸ்சியின் ரசிகர்கள் பல வழிகளில் உற்சாகமடைந்தனர்.

    உலகக் கோப்பை கால்பந்து 2022-ல் அர்ஜென்டினா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் பதிவுகளால் சமூக ஊடகத் தளங்கள் நிரம்பி வழிகின்றன. மகிழ்ச்சியில் திளைத்த லியோனல் மெஸ்சியின் ரசிகர்கள் தெருக்களில் இறங்கி கொண்டாடிவருகின்றனர். ஆனால், இறுதிப் போட்டிக்கு முன்னதாகவே கேரளவைச் சேர்ந்த ரசிகர்கள் குழு மெஸ்சி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அரபிக்கடலில் மூழ்கி மெஸ்சியின் பெரிய கட்அவுட்டை நீருக்கடியில் வைத்தனர்.

    அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் லியோனல் மெஸ்சியின் ரசிகர்கள் பல வழிகளில் உற்சாகமடைந்தனர்.

    அந்த வகையில், கேரளாவை சேர்ந்த ரசிகர்கள் குழு கடலில் 100 அடி ஆழத்தில் லியோனல் மெஸ்சியின் கட்- அவுட்டை உருவாக்கி புதுமையான முறையில் தனது ஆதரவை வெளிப்படுத்தியது.

    முகமது ஸ்வாதிக் என்ற இந்த ரசிகர், 'உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு வந்தால் மெஸ்சியின் கட்அவுட்டை கடலில் 100 அடி ஆழத்தில் வைப்பேன் என்று முன்பே கூறியிருந்தார். அதேபோல், செவ்வாய்கிழமை குரோஷியாவுக்கு எதிரான முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிறகு, முகமது ஸ்வாதிக் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்.

    • கத்தார் உலககோப்பை கால்பந்து போட்டியை கண்டுகளிக்க செல்லும் கால்பந்து வீரர், வீராங்கனைகள், பார்வையாளர்கள், புதிய ‘டீ-சர்ட்’ கேட்டு திருப்பூருக்கு படையெடுக்கின்றனர்.
    • கேரளாவில் உள்ள விற்பனையாளர்களும், விளையாட்டு குழுவினரும், திருப்பூரில் ஆடைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஐ.பி.எல். உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ரசிகர்கள் அணியக்கூடிய வகையில் ஒவ்வொரு அணியின் லோகோவுடன் டீ-சர்ட் பனியன் தயாரித்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு நாடு அணிகளில் விளையாட கூடிய வீரர்களின் ரசிகர்களான கேரள வீரர், வீராங்கனைகள் திருப்பூர் வந்து 'ஜெர்சி' விளையாட்டு ஆடைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    கத்தார் உலககோப்பை கால்பந்து போட்டியை கண்டுகளிக்க செல்லும் கால்பந்து வீரர், வீராங்கனைகள், பார்வையாளர்கள், புதிய 'டீ-சர்ட்' கேட்டு திருப்பூருக்கு படையெடுக்கின்றனர்.

    குறிப்பாக, கேரளாவில் உள்ள விற்பனையாளர்களும், விளையாட்டு குழுவினரும், திருப்பூரில் ஆடைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    கேரள மாநிலத்தில் கால்பந்து வீரர், வீராங்கனைகள், விளையாட்டு குழுக்கள் அதிகம் உள்ளன. அவர்கள் பல்வேறு நாட்டு கால்பந்து அணிகளின் தீவிர ரசிகர்களாகவும் உள்ளனர். இதனால் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு பார்வையாளராக செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இதற்காக 'ஜெர்சி' ஆடைகள் வாங்க திருப்பூர் வருகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் பனியன்களை தயாரித்து கொடுக்கின்றனர்.

    ×