search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொங்கு தமிழர் எழுச்சி பேரவை"

    • கொங்கு தமிழர் எழுச்சி பேரவை நிறுவனத் தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாநில, மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள குங்காரு பாளையத்தில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை நிறுவனத் தலைவர் கோவை செழியனின் 23 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் கொங்கு தமிழர் எழுச்சி பேரவை நிறுவனத் தலைவர் தீரன் கொங்கு சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    மேலும் கோவை செழியன் செய்த தியாகத்தை போற்றும் விதத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் ரங்கசாமி. மாநில பொருளாளர் மணி, மாநில இளைஞரணி செயலாளர் பொள்ளாச்சி ராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் துரை கதிர்வேல், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் குணசேகரன், காங்கேயம் ஒன்றிய செயலாளர் சிவநாதன்*,நகரச் செயலாளர் கோவிந்தராஜ் ,நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் தியாகு, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அவிநாசி மோகன் குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • கோவை செழியன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

     திருப்பூர் :

    கொங்கு தமிழர் எழுச்சி பேரவையினர் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை கதிர்வேல் தலைமை தாங்கினார்.மாநகர பொருளாளர் மூர்த்தி, மாநில துணைச் பொதுச்செயலாளர் கே.கே. ரங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் கொங்கு சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுகோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு திருப்பூர் மாநகரத்தில் சிலை அமைக்க வேண்டும், கோவை செழியன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், சுதந்திர போராட்ட தியாகியும் காந்தியவாதியுமான கோவை கதர் அய்யா முத்து கவுண்டருக்கு திருப்பூர் மாவட்டத்தின் மையப்பகுதியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், அதேபோல் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு சுதந்திரத்திற்காக போராடிய தியாகி வீரபாண்டி சுந்தரம்மாளின் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் குணா ,காங்கேயம் ஒன்றிய செயலாளர் சிவநாதன் ,நகர செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×