என் மலர்
நீங்கள் தேடியது "அனைத்திந்திய கூட்டுறவு வார விழா"
- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் 5,59,909 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
- 14758 உறுப்பினர்களுக்கு 29.29 கோடி கடன் தள்ளுபடி செய்ய அரசாணை பிறப்பிக்க நடவடிக்கையில் உள்ளது.
பல்லடம் :
தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் முன்னிலையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி ஸ்ரீ மணிவேல் மஹாலில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 2056 பயனாளிகளுக்கு ரூ.16.94 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் 5,59,909 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். திருப்பூர் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் மக்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். 31.03.2021-60 நிலுவையிருந்த நகைக்கடன்களில் 38453 நபர்களுக்கு ரூ.158.68 கோடி அளவிற்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கி நகைகள் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. 31.03.2021-ல் நிலுவையிருந்த 1638 சுய உதவிக்குழுக்களை சார்ந்த 14758 உறுப்பினர்களுக்கு 29.29 கோடி கடன் தள்ளுபடி செய்ய அரசாணை பிறப்பிக்க நடவடிக்கையில் உள்ளது.
2022-23-ம் ஆண்டிற்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க ரூ.561 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, நாளது தேதி வரை 23697 உறுப்பினர்களுக்கு 252 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 345 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.1 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. 3020 புதிய உறுப்பினர்களுக்கு ரூ.27 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
2022-23-ம் நிதியாண்டில்உதவிக்குழுக்களுக்குகூட்டுறவுசங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.6.48 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. 606 நபர்களுக்கு ரூ.9.86 கோடி வீட்டு வசதிக்கடன் மற்றும் வீட்டு அடமானக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
2021-22ல் ரூ.16.13 கோடி அளவிற்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு 1.98 லட்சம் நோயுற்ற மக்களுக்கு மட்டும் ரூ.1 கோடி தள்ளுபடியாக வழங்கப்பட்டுள்ளது.சிறுவணிகர்களின் நலன்காக்க சிறுவணிகக் கடன் திட்டத்தின் கீழ் திருப்பூர் மண்டலத்தில் 537 பயனாளிகளுக்கு ரூ.1.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ரூ.395.00 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் 1855 பயனாளிகளுக்கு ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் பயிர்கடனுதவிகளும், 52 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் சுயஉதவிக்குழுக்கடன்களும், 54 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி கடனுதவிகளும், 11 நபர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சிறுவணிக்கடன் உதவிகளும், 69 நபர்களுக்கு ரூ.1லட்சம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடனுதவிகளும், 14 நபர்களுக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் டாம்கோ கடனுதவிகளும், 1 நபருக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுவசதி கடனுதவிகளும் என மொத்தம் 2056 பயனாளிகளுக்கு ரூ.16.94 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
விழாவில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், உடுமலைப்பேட்டை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மாவட்ட வருவாய் அலுவலர் -மேலாண்மை இயக்குநர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.தேன்மொழி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்கள் பழனிச்சாமி, மணி, கதிரவன், திரு.துரைராஜ், முருகேசன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.