என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாதுகாப்பு கேள்விக்குறி"
- மாலை அணிந்த வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்கள் கூட்டமும் தற்பொழுது அதிகரிக்க தொட ங்கியுள்ளது.
- பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அக்கறை காட்டாமல் வருமானத்தை மட்டுமே எதிர்பார்த்து உள்ளதாக தெரிவித்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளத்தில் ஒன்றாக தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தருமபுரி மாவட்ட பகுதி மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் பல நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து ராமர் தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு தீர்த்தங்களில் குளித்து வழிபாடு செய்து செய்வது பலகாலமாக தொடர்ந்து வருகிறது.
பிறப்பு முதல் இறப்பு வரை நடக்கும் அனைத்து சுப,துக்க சம்பவங்களின் போது இந்த கோவிலில் சென்று குளித்துவிட்டு சுவாமியை தரிசனம் செய்தால் நல்லது நடக்கும் என்ற ஐதீகம் இருந்து வருகிறது.இதனால் இந்த கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளது.இந்த நிலையில் தற்பொழுதுகார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிவதற்கும் வருகின்றனர்.மேலும் மாலை அணிந்த வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்கள் கூட்டமும் தற்பொழுது அதிகரிக்க தொட ங்கியுள்ளது.
இந்நிலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் கோயிலுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ள மின் கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் தொங்கி மின்சாரத்தால் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருகின்றது. நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் சென்று வரும் வழியில் இருக்கும் இந்த மின் ஒயர்களை மாற்ற கோயிலில் உள்ள நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணிபுரிந்து வருபவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அலட்சியமாக இருந்துவருகின்றனர்.
அறநிலைத்துறையின் இந்த அலட்சியப்போக்குக்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 26-ந்தேதி அன்று உண்டியல் காணிக்கை 8 லட்சத்தி 65 ஆயிரத்து 402 ரூபாய் , தங்கம் 126. கிராம், வெள்ளி 305-கிராம் என்று கூறப்படுகிறது. 3 மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் திறந்து எண்ணப்படுவதாக கூறப்படுகின்றது.
ஆனால் குடிதண்ணீர், கழிப்பிட வசதி, சுகாதாரம், பாதுகாப்பு வசதிகள் எதுவும் இன்றி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் அவதிக்கும், சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறும் பொழுது கோவிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அக்கறை காட்டாமல் வருமானத்தை மட்டுமே எதிர்பார்த்து உள்ளதாக தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்