என் மலர்
நீங்கள் தேடியது "4பேர் மீது வழக்கு"
- அரசா ங்கத்திற்கு சொந்தமான பொறம்போக்கு இடத்தில் பா.ஜ.க. கட்சி கொடி கம்பத்தை நட்டு கொடி ஏற்ற முயற்சி செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், வடிவேல், தகரை கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணன், கச்சிராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல்முருகன், ஆகியோர் கல்லாநத்தம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள அரசா ங்கத்திற்கு சொந்தமான பொறம்போக்கு இடத்தில் பா.ஜ.க. கட்சி கொடி கம்பத்தை நட்டு கொடி ஏற்ற முயற்சி செய்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பா.ஜ.க. கட்சி கொடி ஏற்றும் போது தடுத்து நிறுத்தி கொடிக்கம்பத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பா.ஜ.கவை சேர்ந்த நிர்வாகிகள் பேர் அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.