என் மலர்
நீங்கள் தேடியது "உலர் தீவன கிடங்கு"
- உலர் தீவனமான வைக்கோல், மக்காச்சோளத்தட்டு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு அதிகரிக்கிறது.
- உலர் தீவன கிடங்கு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் .
உடுமலை :
உடுமலை சுற்றுப்பகுதிகளில் பால் உற்பத்திக்காக மாடுகள் அதிக அளவு வளர்க்கப்படுகின்றன. இவ்வகை மாடுகளுக்கு விளைநிலங்களில் விளையும் பசுந்தீவனமும், வைக்கோல் உட்பட உலர் தீவனங்களும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பசுந்தீவன உற்பத்தி குறையும் போது, உலர் தீவனமான வைக்கோல், மக்காச்சோளத்தட்டு ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாடுகளுக்கு முறையான தீவனம் கிடைக்காமல் பால் உற்பத்தி குறைந்தது. மேலும், குறைந்த விலைக்கு மாடுகளை விற்கும் அவல நிலையும் ஏற்பட்டது.இப்பிரச்சினைக்கு தீர்வாக அரசு உலர் தீவன கிடங்கு திட்டத்தை 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
உடுமலை வட்டாரத்தில் கால்நடைத்துறை சார்பில், அதிகபட்சமாக 5 மாடுகளுக்கு 105 கிலோ வீதம் ஒரு கிலோ வைக்கோல் 2 ரூபாய்க்கு இத்திட்டத்தில் வழங்கப்பட்டது.கால்நடைத்துறை சார்பில் 2 லட்சம் கிலோ வரை வைக்கோல் கொள்முதல் செய்யப்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு வினியோகிக்கப்பட்டது.
சில ஆண்டுகள் மட்டுமே இத்திட்டம் செயல்பாட்டில் இருந்தது. இந்நிலையில் உலர் தீவன கிடங்கு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை பகுதியில் பல வகையான பசுந்தீவனங்கள் கிடைத்தாலும் வைக்கோலுக்காக பழனி உட்பட பல்வேறு பகுதிகளுக்குச்செல்ல வேண்டியுள்ளது. அதிக வாடகை அளித்து வைக்கோலை எடுத்து வர வேண்டியிருப்பதால் கட்டுபடியாவதில்லை.குறைந்த விலையில் அனைத்து கால்நடை மருந்தகம் மற்றும் கிளை நிலையங்களில் வைக்கோலை விற்பனை செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.அனைத்துப்பகுதிகளிலும் நெல் அறுவடை சீசன் துவங்கியுள்ள நிலையில் உடனடியாக இத்திட்டம் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்என கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.